டில்லி

ருத்துவக்கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்துக்கு தமது முழு ஆதரவை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்வி பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக தொடர்ந்து போராடி வருகிறது.  இதற்கு ஆதரவு அளிக்கக் கோரி திமுக தலைவர் மு க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.  அதற்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது ஆதரவு கடிதத்தை அனுப்பி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது கடிதத்தில்,

“பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு அளவில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச கல்லூரி இடங்களில் ஒதுக்கீடு வழங்க இந்த கடிதத்தின் மூலம் நான் எனது ஆதரவைத் தெரிவித்து கொள்கிறேன்.

மத்திய அரசு அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என நான் எனது 2020 ஆம் வருடம் ஜூலை 3 ஆம் தேதி இட்ட கடிதத்தில் மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளேன். கடந்த ஜூலை 27 ஆம் தேதி அன்று திமுக மற்றும் உள்ள கட்சிகள் இது குறித்து அளித்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்பை நீங்கள் அறிவீர்கள்.  அதில் மத்திய மாநில அரசுகள் இணைந்து  இந்த ஒதுக்கீட்டை அளிப்பது குறித்து மருத்துவ மற்றும் பல் மருத்துவக்குழுவுடன் இணைந்து தீர்வு காண வலியுறுத்தபட்டுள்ளது.

மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு அளிக்க மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையுடன் ஒத்துப் போகும் என நான் நம்புகிறேன்.  இவ்வாறு ஒதுக்கீடு அளிக்காமல் இருப்பது சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும். காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி முன்னேற்றத்துக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும்”

எனத் தெரிவித்துள்ளார்.