பல்லடம்
பல்லடத்தை அடுத்த சே மலைக் கவுண்டம்பாளைஅய்த்தில் மூவரை கொலை செய்தவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி ’
‘பல்லடத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 6 முதல் 7 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கூர்மையான ஆயுதத்தை கொண்டு மூவரையும் கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை ஒருவர் செய்திருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது”.
எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]