FotorCreated44
 
பதான்கோட் விமானப்படைத்தளத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு வருகையை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
தீவிரவாதிகளால் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளான பதான் கோட் விமானப்படைத் தளத்தை புலனாய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள் குழு அங்கு வந்து சேர்ந்துள்ளது. அவர்களின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதான் கோட் விமானப்படைத்தளத்துக்கு வெளியே காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதான் கோட் தீவிரவாத்த் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்ட்து. இதுதொடர்பாக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்ட்து. இதனை அடுத்து பாகிஸ்தான் அரசு, இத்தொடர்பாக விசாரணை நடத்த 5 அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்தது.அக்குழு மார்ச் 28 ஆம் தேதி இந்தியா வந்தனர். அக்குழுவினை இன்று (மார்ச்-29) குண்டு துளைக்காத கவச வாகனத்தில் பதான் கோட் விமானப்படைத் தளத்துக்கு இந்திய அதிகாரிகளால் அழைத்து வனர். இவர்களின் வருகைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டன.
அதுதொடர்பான செய்திகள் வருமாறு:
பதான்கோட் விமானப்படை தளத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நட்ததினர். அப்போது அவர்கள் கறுப்புக் கொடியுடன்  “பாகிஸ்தான் கூட்டுக் குழுவே திரும்பிப் போ!” என்ற பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.பாகிஸ்தான் உருவ பொம்மைகளையும் எரித்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
டெல்லி மாநில அமைச்சர் கபில் மிஸ்ரா தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் ‘பாஜக- ஐஎஸ்ஐ கூட்டணி’ என இதை வர்ணித்தார். மோடி இந்தியாவை அவமதிப்பதை நாம் அனுமதிக்கமாட்டோம். ஐ எஸ் ஐ க்கு நம் பிரதமர் மோடி பிரியாணி விருந்து வழங்கியது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் ஜனவரி 2 ஆம் தேதி  நுழைந்த 6 தீவிரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். மிகவும்  சென்சிட்டிவான இந்த பாதுகாப்புத் தளம் உள்ள அந்த இடத்துக்கு பாகிஸ்தான் கூட்டுக்குழுவை அழைத்துச் சென்றுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விமானப்படைத்தளத்தின் மிகமுக்கியமான சென்சிட்டிவ் பகுதிகள் கூட்டுக்குழுவின் பார்வையில் படாதபடி மறைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக வெள்ளை , மஞ்சள், சிவப்பு நிறத்தில் வெளியே கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இந்த விமானப்படைத்தளத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவிய பாதை, துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் அவர்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையினையும் பாகிஸ்தான் கூட்டுக் குழு பார்வையிட உள்ளது.
இத்தாக்குதல் சம்ப்வத்தின் முக்கிய சாட்சியாகவும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளால் காரில் கடத்தப்பட்டவருமான பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரியையும் இக்குழு சந்திக்க இந்தியா அனுமதி வழங்கி உள்ளது.ஆனால் அவரிடம் எந்த விசாரணையோ, கேள்விகளோ கேட்க அனுமதிக்கப்படாது என்றும் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மார்ச் 28 டெல்லி  வந்த பாகிஸ்தான் கூட்டுக் குழுவினர் இந்திய பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நட்த்தினர். அப்போது இத்தாக்குதலில் பாகிஸ்தானின் ஜாய்ஸ்-இ-முகமட் என்ற அமைப்பினர்தான் ஈடுபட்டனர் என்று இந்தியா தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை  அக்குழுவினர் ஏற்றுக் கொண்டனரா? அல்லது நிராகரித்தனரா? எனத் தெரியவில்லை.
பாகிஸ்தான் கூட்டுக்குழுவை பதான்கோட்டில் விசாரணை நட்த்த அனுமதித்தன் மூலம் பாகிஸ்தானிடம் பிர்தமர் மோடி சரணடைந்து விட்டார் எனவும், பாகிஸ்தான் ஏற்பாட்டில்தான் இத்தீவிரத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால்,  பாகிஸ்தானே எப்படி நடுநிலையுடன் புலன்விசாரணை செய்யும்? என்றும் டெல்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாகிஸ்தான் கூட்டுக்குழுவினை இங்கு விசாரனை செய்ய அனுமதிக்கப்பட்டதன் மூலம், இத்தீவிரவாத்த் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புக்கான ஆதாரங்களையும் சாட்சிகளையும்  அவர்களே நன்றாக அறியமுடியும். இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி மவுலானா மசூத் அசார் , ஜெய்ஷ்-இ- முகமது  எனும் தீவிரவாத அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவன் என்பதையும் அக்குழுவினருக்கு தெளிவாக உணர்த்த முடியும் என்றும் இந்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று டெல்லி வந்த பாகிஸ்தான் குழுவுடன்  இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஆறு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது  விளக்கப் படம் மூலம் பயங்கரவாதிகளின் தொலைபேசி  அழைப்பு பதிவுகள்,  மற்றும் தீவிரவாதிகளின் கைக்கூலிகளான காசிம் ஜான் , அஷ்பாக் அஹமட் ,ஹபிஸ் அப்துல் ஷகூர் போன்றவர்களின் தொடர்புகள், அவர்களின் டிஎன்ஏ மாதிரிகள், இதுபோன்ற பல்வேறு வலுவான ஆதாரங்களையும்  அறிக்கைகளையும் பாகிஸ்தான் குழுவிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது.