டில்லி:

இந்தியாவில் அதிக வாகனங்கள் இயங்கும் 5 பெரு நகரங்கள் உள்பட 10 நகரங்களில் ஒரு சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள 10 பேரில் 6 பேர் வாகன்ததை ஓட்டிக் காட்டாமலேயே உரிமம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

ஆக்ராவில் வெறும் 12 சதவீத ஓட்டுனர்கள் தான் ஓட்டுனர் உரிமத்தை நேர்மையான முறையில் பெற்றுள்ளனர். மீதமுள்ள 88 சதவீதம் பேர் வாகனங்கள் ஓட்டிக் காட்டும் தேர்வில் கலந்துகொள்ளாமலே உரிமம் பெற்றுள்ளனர். ஜெயப்பூரில் இது 72 சதவீதமாகவும், கவுகாத்தியில் 64 சதவீதமாகவும் உள்ளது. டில்லியில் 54 சதவீதம், மும்பையில் 50 சதவீதம் பேர் ஓட்டுனர் தேர்வில் கலந்துகொள்ளாமலேயே உரிமம் பெற்றுள்ளனர்.

சாலை பாதுகாப்ப வக்கீல்கள் குழுவின் சேவ் லைஃப் என்ற அறக்கட்டளை சார்பில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. மோட்டார் வாகன சட்ட திருத்தம் குறித்து ராஜ்யசபாவில் விவாதம் நடத்தப்பட்டு, லோக்சபாவில் நிறைவேற்றவுள்ள நிலையில் இந்த சர்வே முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஓட்டுனர் தேர்வு, போலி மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமம் பெற்றிருந்தால் அதிகளவில் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சர்வே முடிவில் 59 சதவீதம் பேர் ஓட்டுனர் உரிமம் பெற அதற்கான தேர்வில் கலந்தகொள்ளவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியாவில் உரிமம் வழங்கும் முறை முற்றிலும் ஊழல் மற்றும் திறனற்றதாக உள்ளது. கட்டாய ஓட்டுனர் பயிற்சி முறை இல்லாததும் ஒரு காரணமாக உள்ளது.

நாட்டில் 997 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் 1.15 கோடி புதுப்பித்தல், புதிய ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்படுகிறது. ஒரு வேலை நாளில் 40 உரிமங்கள் சராசரியாக ஒரு ஆர்டிஒ அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. டில்லி போன்ற நகரங்களில் இது 130 ஆக உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அமைத்த குழு நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 உரிமங்கள் மட்டுமே ஒரு வட்டார போக்குவரத்து அலுவலரால் வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 130 முதல் 150 பேரில் ஓட் டுனர் தகுதியை ஒரு மனிதனால் பரிசோதனை செய்ய முடியாது என்று பரிந்துரை செய்திருந்தது.

சாதாரண குடிமக்கள் மட்டுமின்றி லோக்சபா உறுப்பினர்கள் கூட இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட் டுள்ளனர். கடந்த ஏப்ரலில் லோக்சபாவில் இது தொடர்பாக நடந்த விவாதத்தில் போது சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி பேசுகையில்,‘‘ இங்குள்ளவர்களில் எத்தனை பேர் ஓட்டுனர் தேர்வில் கலந்துகொண்டீர்கள். அவர்கள் கைகளை உயர்த்துங்கள்’’ என்றார். அப்போது அங்கிருந்தவர்களில் குறைவானவர்களே கைகளை தூக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வேயில் பதிலளித்த 80 சதவீதம் பேர் சாலை பயணம் பாதுகாப்பற்றது என்று தெரிவித்துள்ளனர். 82 சதவீத பாதசாரிகள் சாலைகளை கடக்கவும், நடக்கவும் பாதுகாப்பான சூழ்நிலை இல்லை என்று தெரிவித்துள்ளனர். கொச்சியில் 90 சதவீதம் பேர் பாதுகாப்பு இல்லை என்று உணருவதாக தெரிவித்துள்ளனர்.

சர்வேயில் 50 சதவீதம் பேர் சாலை விபத்துக்களை சந்தித்தாக தெரிவித்துள்ளனர். 31 சதவீதம் பேர் தங்களது குடும்ப உறுப்பினர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தனர் என்று தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் தங்களது குடும்ப உறுப்பினர் ஒருவர் சாலை விபத்தில் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சாலை விபத்துகளை குறைக்க வலுவான சாலை பாதுகாப்பு சட்டம் வேண்டும் என்று 91 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதி மீறுபவர்களை கடுமையான அபராத தெ £கையுடன் தண்டித்தால் மட்டுமே சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்படும என்று 81 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சாலை பாதுகாப்பு குறித்து குடிமகன்கள் கவலை அடைந்திருப்பது சர்வே மூலம் தெளிவாக தெரிகிறது. வலுவான சாலை பாதுகாப்பு சட்டம் அவசியம் என்பதை அனைவரும் உணர்த்தியுள்ளனர் என்று சேவ் லைஃப் அறக்கட்டளை சிஇஒ பியூஷ் திவாரி தெரிவித்துள்ளார்.