Details of maximum expenditure of urban local election candidates

சென்னை:
கர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களின் அதிகபட்ச செலவினத்தொகை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற தேர்தல் நடக்கிறது என்றும், பிப்ரவரி 22 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக தேர்தல் பிரசாரம் உள் அரங்கில் மட்டுமே நடைபெற வேண்டும். பொதுவெளியில் பேரணி நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மண்டபங்களில் பிரச்சாரம் செய்யும்போது 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், 31029 வாக்குச்சாவடிகளில், 80,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், 1 லட்சத்து 33 ஆயிரம் அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அதிகபட்சமாக பாதுகாப்பு வழங்கப்படும்; நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப் ஸ்ட்ரீமிங் மூலமும் கண்காணிப்பு செய்யப்படும் என்றும் சென்னையில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக செயல்படுவார்கள். 80,000 காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளால் தேர்தல் பேரணி பிரசாரத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.