yuvaraj
ங்களுடன் தே.மு.தி.க. கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தது  தி.மு.கழகம். இப்போது தே.மு.தி.க.வின் நிர்வாகிகளை . இழுத்து வருகிறது.
ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் சிலர், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதே போல தே.மு.தி.க. கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ்  இன்று காலை  தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
இதேபோல் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த தே.மு.தி.க.வினர் 130 பேர் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் அறிவாலயம் சென்று தி.மு.க.வில் இணைந்தனர்.
தே.மு.தி.கவைச் சேர்ந்த மேலும் பல மாவட்ட, மாநில நிர்வாகிகளிடம் தி.மு.க. “பேசி” வருவதாகவும் விரைவில் அவர்கள் தி.மு.கவில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இத்தனை நாள் தனது தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள், தி.மு.கவில் இணைய ஆரம்பித்திருப்பது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இப்படி தே.மு.தி.க.நிர்வாகிகள்  தி.மு.க.வுக்கு தாவ காரணமே விஜயகாந்த்தான் என்று தே.மு.தி.கவிலேயே ஒரு பேச்சு அடிபடுகிறது. “மக்கள் நலக்கூட்டணியில் நான்கு கட்சிகள் உள்ளன. அக்கூட்டணியில் உள்ள கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், இணைந்தார்கள். அதே போல தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியும், முதலில் மறைமுக பேச்சு வார்த்தை நடந்தது… உடனே கூட்டணியும் அறிவிக்கப்பட்டது.
அப்படி எங்கள் கூட்டணியை கேப்டன் அமைக்காமல் இழுத்தடித்தார். இடையே, தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதி என்றெல்லாம் செய்திகள் பரவ ஆரம்பித்தன. இதை நம்பிய மாவட்ட நிர்வாகிகள், தி.மு.க. பிரமுகர்களுடன் நெருங்கி பழக ஆரம்பித்தனர். அவர்களுக்குள் “கெமிஸ்ட்ரி” ஒர்க் அவுட் ஆகிவிட்டது  அந்த நெருக்கத்தினால்தான் தே.மு.தி.க. நிர்வாகிகளை தி.மு.க. புள்ளிகள் எளிதில் அணுகி, தங்கள் கட்சிக்கு இழுத்துவிடுகிறார்கள். ஆக, தே.மு.தி.கவினரை தி.முகவுக்கு வழியனுப்பி வைப்பதே கேப்டன்தான்!” என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் தே.மு.தி.க. தொண்டர்கள்.
அதே நேரத்தில் அவர்கள், “எங்கள் கட்சியில் எல்லாமே கேப்டன், அண்ணி பிரேலதா, அண்ணன் சுதீஷ் ஆகியோர்தான்.  இவர்களைத் தவிர மற்ற அனைவரும் டம்மிதான். ஆகவே மாவட்ட நிர்வாகிகள் சிலர் தி.மு.கவுக்கு போவதால் எங்களுக்கு இழப்பு ஏற்படப்போவதில்லை. ஆனால்  “கூட்டணிக்கு வராததால், அடுத்த கட்சியை உடைக்கிறதே தி.மு.க.” என்று அந்தக் கட்சிக்குத்தான் இமேஜ் ஸ்பாயில் ஆகும்” என்றும் கூறுகிறார்கள்.