தேர்வறையில் திடீரென ஆசிரியர் மயங்கி மரணமடைந்த சம்பவம் குறித்து தனது வேதனையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர் கஸ்தூரிரங்கன்:

news_10-12-2015_9dead

·

 “தேர்வுக்காலங்களில் வினாத்தாட்கள் தரும் கடும் மன அழுத்தத்தில் ஆண்டுதோறும் பலியாகும் மாணவர்கள் குறித்த செய்தி காலைத் தேநீரோடு நாம் கடந்துபோகும் செய்திகளில் ஒன்றாக மாறிவிட்டது…
உண்மையில் அத்தகு வினத்தாட்களை எடுத்தஆசிரியர்களின் மனசு ஏதாவது ஒருதருணத்தில் அவர்களை சிகிரட் முனையாக சுடத்தான் செய்யும்.

இந்த இற்றை சமூகம் ஒரு இச்சுடன் கடந்து போகும் அந்த மாணவ மரணங்களை பற்றி மட்டுமல்ல இந்த ஆண்டு செய்திகளில் வெளிவந்த ஒரு ஆசிரியரின் மரணம் குறித்தும் பேச இருக்கிறது.
தனியார்பள்ளிகள் டாப்பர் கிளாஸ் என மாணவர்களை பிரிப்பதில் அவர்கள் எவ்வளவு மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் என்பது நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால்மட்டுமே தெரியும்
டார்வினின் வலியது பிழைக்கும் விதிமட்டுமே அது …
இது கல்வித்தத்துவங்களுக்கு மட்டுமள்ள மனிதம் சகோதரத்துவம் என எல்லா அடிப்படைப்பண்புகளுக்குமே எதிரானது.
வணிகஉலகில் இத்தகு அழுத்தங்கள் தேவைதான் என்று நீங்கள் வாதிட்டாலும் கல்வியாளர்களும், ஆசிரியர்களும் இதை ஆதரிக்கவில்லை. இதன் கொடூரம் இன்னும் நிஜமுகத்தை காட்டவில்லை… விரைவில் காட்டும்
நாம் அதையும் ஒரு தேநீரோடு கடப்போம்,
இப்படி மாணவர்கள் பாதிக்கப்படுகிற பலியாகிற ஒரு விசயமாக தேர்வுமுறைகள் இருக்கின்றபொழுது இந்த ஆண்டு தேர்வரையிலேயே மயங்கி விழுந்து உயிர்விட்ட ஆசிரியர் ஒருவர்குறித்த செய்தி நம்மை உலுக்குகிறது.
தேர்வு என்பது மூன்றுமணிநேரம் ஆசிரியர்கள் நின்றுகொண்டே செய்யவேண்டிய ஒரு பணி. இது ஆசிரியப்பணியின் தவிர்க்கவே முடியாத கூடாத ஒரு அங்கம்.
நீண்ட பயணங்கள், பேருந்துக்கால அட்டவணை, உணவு பொட்டலங்கள் என பல காரணிகளை ஆசிரியர்கள் தயார்செய்யவேண்டும்.
இது மதிப்பூதியம் மட்டுமே தரும்பணி, அது பலருக்கு பேருந்துக்கும் பெட்ரோலுக்குமே சரியாகிவிடும்.
தேர்வை நல்லமுறையில் நடத்துவதும், நடத்த உதவுவதும் மட்டுமே உண்மையான ஊதியம்.
மிகுந்த படப்புடன் செய்யவேண்டிய பணியல்ல இது, உடல்நலக்குறைவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டுவிடவேண்டும்.
மீறி நம்மால் முடியும் என்று இந்தக் கடும் கோடையில் தேர்வறைகளில் கால் வைத்தால் மறுநாள் செய்தித்தாளின் ஒரு காலம் நமக்குத்தான்.
சமூகம் ஒரு இச் சப்தத்தினை எழுப்பி கடந்து போய்விடும்.
மேலும் சில அனுபவப்பகிரல்கள்
தொடர் உடற்பயிற்சிகள் அவசியம், மூன்று மணிநேரம் மாணவர்களைக் கண்காணிப்பது என்பது கிட்டத்தட தியானம் மாதிரித்தான். எனவே தொடர்ந்த உடற்பயிற்சிகள் மூலம் உடல்திறனை பேணுவது அவசியம்.
உங்கள் உடல்தகுதிக்கு மூன்றுமணிநேரம் உங்களால் நிற்க முடியவில்லை என்றால் உரிய மருத்துவக்காரணங்களைச் சொல்லி விடுதல் பெற தயங்கவேண்டாம். எந்த வினாடியிலும்.
எந்தச் சூழலிலும் சவாலான மருத்தவ தேவைகளை வைத்துக்கொண்டு தேர்வறைக்குள் நுழையவேண்டாம்..
விளக்கக்கடிதம் எழுதுவதை விட உங்கள் உயிர்முக்கியம்…
தேர்வு நடத்துவது முக்கியம்தான்
அதைவிட முக்கியம் உங்கள் உயிர்
அன்புடன்
உங்கள் உயிரின் மதிப்பை உணர்ந்த (
இப்போதைக்கு சி.பி.எஸ். ஒய்வூதியம் கிடைக்கப்போவதில்லை எனவும் உணர்ந்த)
உங்கள்
சக ஆசிரியன்.”
Kasthuri Rengan (முகநூல் பதிவு)