சென்னை:
.ந.கூட்டணியுடனான கூட்டணியை தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் முறித்துக்கொண்டதாக சொல்லப்படும் நிலையில், அக்ககட்சிகள் ம.ந.கூட்டணியில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ம.ந.கூட்டணியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட த.மா.கா., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகியதாக பேசப்படுகிறது.
00
“கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ம.ந.கூட்டணியோடு கூட்டணி வைககவில்லை, தொகுதி உடன்பாடுதான் செய்துகொண்டோம்” என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்தார்.  உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி வைப்பது என்பது பற்றி முடிவெடுக்க தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. 24ம் தேதி நடத்தவிருக்கும் இப்தார் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. கலந்துகொள்ளவில்லை.
ஆகவே இந்த இரு கட்சிகளும் ம.ந.கூட்டணியைவிட்டு விலகிவிட்டதாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். அப்போது அவர், தமாகா மற்றும் தேமுதிக இரு கட்சிகளுமே மக்கள் நல கூட்டணியில் தொடருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர், “அதிமுகவும் சட்டசபைக்குள் மோதலில் ஈடுபட்டு வருவது வருத்தமளிக்கிறது.  சட்டசபையில் ஆக்கப்பூர்வ விவகாரங்களை பேச வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.