சென்னை:  அண்ணா பல்கலைகழகத்தில் விஷ வாயு தாக்கி  இருவர்  பலியாகியுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில்   சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கட்டிட பணி நடந்து வருகிறது. அதற்காக  பூமிக்கடியில் கிணறு போன்ற அறை அமைத்து அதற்கு வார்னீஷ் அடிக்கும் பணி நடக்கிறது.
a
இந்த  பணியை  சென்னை அம்பத்தூரை சேர்ந்த தீபன்(25) மற்றும் அய்யபாக்கத்தை சேர்ந்த  ரமேஷ் (26)  இரண்டு தொழிலாளிகள்  செய்து வந்தனர். இவர்கள் நேற்று மாலை  பூமிக்கடியில் உள்ள அந்த குறுகிய அறையில் இறங்கினர்.  அங்கு
நிலையில்  வார்னீஸை திறந்த போது திடீரென அதிலிருந்த வாயு வெளியேறி அந்த அறை முழுவதும் பரவியது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே  பலியானார்கள்.
இது குறித்து பல்கலை சார்பில்  அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   பலியான இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.