செக் குடியரசு:

சீனாவிலிருந்து, ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைக்கான கிட்களில் பெரும்பாலனவை தவறானவை என்று உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் செக் குடியரசிற்கு, சீனா ஒரு லட்சத்து 50 ஆயிரம், கொரோனா வைரஸ் சோதனைக் கிட்களை அனுப்பியது. இந்த சோதனை கிட்களில் 80 சதவீதம் வரை சரியான சோதனை கிட்கள் அல்ல என்றும் உள்ளூர் செய்தி நிருவனமான எக்ஸ்பாட்ஸ்.காஸ் தெரிவித்துள்ளது. இந்த கிட்களை பயன்படுத்தி சோதனை செய்தால், அந்த சோதனையின் முடிவுகள், 10 அல்லது 15 நிமிடங்களில் முடிவு தெரிந்து விடும். ஆனால் இந்த சோதனை கிட்கள் அதிக பிழை விகிதம் கொண்டதாக இருந்தது.

இந்த கிட்களுக்காக செக் குடியரசு நாட்டின் சுகாதார அமைச்சகம் 546,000 டாலர் செலுத்தி, ஒரு லட்சம் சோதனை கிட்களை வாங்கியது. இதுமட்டுமின்றி செக் குடியரசின் உள்துறை அமைச்சகமும் தன் பங்குக்கு 50 ஆயிரம் டாலரை கொடுத்துள்ளது.

செக் குடியரசின் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஜான் ஹமாசெக், சீனாவில் இருந்து வாங்கப்பட்ட சோதனை கிட்கள் மூலம் நடத்தப்பட்ட பல சோதனைகள் தவறானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்,

இதற்கிடையில், 56,000 க்கும் அதிகமான தொற்றுநோய்களையும், 4,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் இறப்புகளையும் கொண்ட ஸ்பெயின், இத்தாலிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான இறப்புக்களை கொண்ட நாடாக விளங்கி வருகிறது. சீனாவிடம் இருந்து தான் வாங்கிய சோதனை கிட்கள் தவறான முடிவுகளை கொடுப்பதாக தெரிவித்துளது.

ஸ்பெயினின் சுகாதார சேவைகள் மற்றும் அவசரநிலைகளுக்கான மைய இயக்குனர் பெர்னாண்டோ சிமோன் தெரிவிக்கையில், ஸ்பெயினில் 9,000 சோதனை கிட்களை பரிசோதித்து உள்ளோம். இவை அனைத்தும் தவறான முடிவுகளையே தந்துள்ளதால், அவற்றை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதற்கு விளக்கம் அளித்த ஸ்பெயினில் உள்ள சீன தூதரகம், வைரஸ் பாதித்த நாடுகளுக்கு சீனா சப்ளை செய்து வரும் தயாரிப்புகளில், பயோஇஸி தயாரிப்புகள் சேர்க்கப்படவில்லை என்று கூறியுள்ளது.