டில்லி

ரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.8,843 கோடி கடன் பெற தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவரும் அவரவர் தற்போது வசிக்கும் பகுதியில் ரேஷன் பொருட்களை வாங்க முகவரியை மாற்ற வேண்டியது இருந்தது.   ஆனால் பலர் பணியின் காரணமாக இடம் விட்டு இடம் மாற வேண்டிய சூழல் உள்ளது.  இவர்கள் முகவரியை மாற்றாமல் ரேஷன் பொருட்களை வாங்க உதவுவதே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமாகும்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர்  சத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதிலில், “நாடெங்கும் 23,62 கோடி ரேஷன் அட்டைகளில் 21.92 கோடி அட்டைகளில் (அதாவது 92.8%) ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.   மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்த மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 17 மாநிலங்களுக்கு 37,600 கோடி ரூபாய் வெளிச்சந்தைகளில் இருந்து இந்த திட்டம் செயல்படுத்தக் கடன் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதில் தமிழகத்துக்கு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்த ரூ.8,843 கோடி ரூபாய் வெளிச்சந்தைகளில் இருந்து கூடுதல் கடன் பெற அனும்கதி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.