tolgate

நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில்  அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகார் எழுந்திருக்கும் நிலையில் மேலும் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது.

 மாநிலத்தில் உள்ள, 20 சுங்கச்சாவடிகளில் ஏப்., 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. தற்போது, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு, 25 ரூபாய் முதல், 75 ரூபாய்; சரக்கு வாகனங்களுக்கு, 300 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், 10 சதவீத கட்டண உயர்வு அமலாக உள்ளது. இதனால், சரக்கு வாகனங்கள் வாடகை உயர வாய்ப்பு உள்ளது.

கட்டண உயர்வு அமலாக உள்ள இடங்கள்

சூரப்பட்டு

வானகரம்

கிருஷ்ணகிரி

வேலன்செட்டியூர்

சாலைப்புதுார்

பள்ளிக்கொண்டா

வாணியம்பாடி

எட்டூர்வட்டம்

கப்பலுார்

நாங்குனேரி

பரனுார்

ஆத்துார்

புதுக்கோட்டை

பட்டரை பெரும்புதுார்

சிட்டம்பட்டி

பூதக்குடி

லெட்சுமணப்பட்டி

லெம்பாலக்குடி

நெமிலி

சென்னசமுத்திரம்