10157320_1544157629239281_4696639075431571581_n

மிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பின் நிறுவனத்தலைவர் வீரலட்சுமி என்பவர், சிம்பு பாடிய பீப் பாடலை ஆதரித்து கருத்து தெரிவித்தார். இதையடுத்து வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன், “சிம்புவிடம் பணம் வாங்கிக்கொண்டு வீரலட்சுமி அவரை ஆதரிக்கிறார். தமிழர் உரிமைகளுக்காக போராடுவதாகச் சொல்லி என்னிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கினார்” என்று குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து வீரலட்சுமியின் கருத்தை அறிய அவரை தொடர்புகொண்டோம். தொலைக்காட்சி விவாதத்துக்காக தொ.கா. நிலையத்தில் இருப்பதாகவும் பிறகு பேசுவதாகவும் கூறினார்.

பிறகு நாம் தொடர்புகொண்டபோது, நமது அழைப்பை ஏற்கவில்லை. நாம் தொடர்ந்து முயற்சி செய்ய, அழைப்பை ஏற்றார். அவர் மீதான குற்றச்சாட்டு பற்றி கேட்டோம். அதற்கு அவர், “என் மீது குற்றம் சாட்டியவர், ஒரு அமைப்பின் மாவட்ட செயலாளர். ஆகவே கட்சி நிர்வாகியே பதில் சொல்வார்” என்றார்.

சிறிது நேரத்தில் த.மு.படையின் செயலாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியவர், “நாங்கள்தான் பலருக்கும் உதவி செய்கிறோம். என் பூர்விக சொத்தை அடமானம் வைத்து எங்கள் அமைப்பின் செலவை செய்கிறோம். பத்தாயிரம் ரூபாய் என்பது எங்கள் நிர்வாகிகளின் ஒரு வேளை சாப்பாட்டுச் செலவு.

எங்கள் தலைவர் வீரலட்சுமி பத்தாயிரம் ரூபாய் வாங்கியதாக சொல்லும் தமிழ் இராசேந்திரன், அதற்கான ஆதாரங்களைக் காட்ட முடியுமா” என்றார்.

இந்த நிலையில் த.மு.படையின் வீரலட்சுமி, டி.ராஜேந்தரை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து வீரலட்சுமி தெரிவித்துள்ள கருத்தாவது:

“நான் பேசுபவள் அல்ல. செயல் வீரர்.

என் உயிரினும் மேலான நமது இனத்தின் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரனார் அவர்களை உள்ளார்ந்து நேசித்தவரும் ,தமிழர் மண்,தமிழர்மொழி,தமிழர்களை அரவனைக்கும் அண்ணன் டி.ஆர்.ராஜேந்திரன் அவர்களின் குடும்பத்தை பாதுகாக்க நான் தற்கொலை படையாக மாறக்கூட தயாராக உள்ளேன்.

இன்று தான் என் வாழ்நாளில் முதல் முறையாக அண்ணன் டி.ஆர்.ராஜேந்திரன் அவர்களை பாத்ததும்,பேசியதும்” – இவ்வாறு வீரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.