சென்னை
டாஸ்மாக் மதுக்கடைகள் முறைகேடுகள் குறித்துப் பல புகார்கள் வருவதால் அமைச்சர் செந்தில் பாலாஜி சில உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூலமாக மது விற்பனை பகல் 12 முதல் இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிறது. ஆனால் எந்நேரமும் மது விற்பனை நடப்பதாகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் மது பானங்கள் விற்கப்படுவதாகவும் புகாரகள் எழுந்தன.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கீழ்க்கண்ட உத்தரவை அனைத்து மாவட்ட டாஸ்மாக் கடை மேலாளர்களுக்குப் பிறப்பித்துள்ளார்
அதன்படி
1. டாஸ்மாக் கடைகள் இரவு 10 வரை மட்டுமே இயக்கப்பட வேண்டும்
2. அனைத்து டாஸ்மாக் கடைகளும் நண்பகல் 12 முதல் இரவு 10 வரை மட்டுமே இயங்க வேண்டும்
3. மது பானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது.
4. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதல் விற்பனை விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும்.
என உத்தரவிடப்பட்டுள்ளது.