ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அன்பழகன் தரப்பு வாதங்களை கேட்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
உங்களது வாதங்கள் அனைத்தும் கர்நாடக அரசின் வாதங்களை போலவே உள்ளது. விரைவில் தீர்ப்பளித்து இவ்வழக்கை முடிக்க உதவவேண்டும். இருப்பினும், அன்பழகன் தரப்பில் ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட வாதங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் என்றும். இதுவரை தெரிவிக்காத புதிய வாதங்கள் ஏதேனும் இருந்தால் அதை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யலான் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உங்கள் நோக்கத்தில் முகாந்திரம் இல்லை. இப்போது நடைபெறும் இந்த வழக்கு ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் கர்நாடக அரசுக்கும் எதிரானது. இதில் கர்நாடக அரசும், சுப்பிரமணியன் சுவாமி தரப்பும் பல்வேறு வாதங்களை முன்வைத்திருக்கிறது. இந்த நிலையில், இவ்வழக்கில் நீங்கள் புதிதாக என்ன சொல்லப்போகிறீர்கள். கர்நாடக அரசு போதுமான அளவுக்கு தனது வாதத்தில் வைத்துள்ளது. தீர்ப்பின் போது உங்களது முந்தைய கருத்துக்களை கவனத்தில் வைத்துக் கொள்கிறோம். என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.