டில்லி
இன்று கூடி உள்ள 22ஆவது ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் 9 பகுதிகளில் முக்கிய மாறுதல்கள் அறிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
ஜி எஸ் டி கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அமுலாக்கப்பட்டு கிட்டத்தட்ட நூறு தினங்கள் ஆகி உள்ள நிலையில் இது குறித்து குழப்பங்களும், கோபங்களும், புரிதல் இன்மையும் தான் நிறைந்துள்ளது. சில பொருட்களுக்கு வரி விதிப்பு அதிகமாகி விலை கடுமையாக ஏறி உள்ளதும், பெட்ரோல், டீசல் போன்றவைகள் ஜி எஸ் டி க்கு கொண்டு வரப்பட்டால் தான் விலை குறையும் என நிலைமை உள்ளது.
கடந்த முறை கூடிய ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் கார்களுக்கான ஜி எஸ் டி வரி மாற்றி அமக்கப்பட்டது. தற்போது நடை பெறும் கவுன்சில் கூட்டத்தில் சில முக்கிய பொருட்களுக்கான ஜி எஸ் டி வரி விகிதங்கள் மாற்றப்படலாம் என தெரிய வந்துள்ளது. அவை என்ன என இப்போது பார்ப்போம்.
1. வரிக் கணக்கு அளிப்பதற்கான குறைந்த பட்ச தொடக்க நிலை ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடிக்கு மாற்றப்படலாம். அதனால் சிறிய தொழிலதிபர்கள் மூன்று நிலை வரிக்கணக்கு பதிவு செய்ய தேவை இல்லாமல் 1.5% வரி செலுத்த வேண்டி இருக்கும்
2. ரு. 1.5 கோடி வரை வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் இனி மூன்று மாதத்துக்கு ஒரு முறை கணக்கு அளித்தால் போதுமானது என திருத்தப்படலாம். இதன் மூலம் மாதா மாதம் கணக்கு அளிக்கும் முறையில் இருந்து சிறு வணிகர்கள், சிறு முதலாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படலாம்.
3. பழைய வாட் சமய வரிக் கொள்கைகளை இப்போது மீண்டும் மாற்றி அமைக்கப் பட மாட்டாது. அப்போது கண்டு பிடிக்கப்பட்ட சிறு சிறு தவறுதல்களை மீண்டும் தோண்டி எடுக்கபடமாட்டாது.
4. சில இனங்களுக்கு வரிகள் விற்பவர் செலுத்த வேண்டி வரலாம். இது பற்றி பதிவு செய்யாத வணிகர்கள் இடையே வரி விகிதங்கள் மாறு படலாம்/
5. ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப தர வேண்டிய வரிப்பணம் உடனடியாக வழங்க வழி செய்யப்படலாம். இதன் மூலம் அவர்களுக்கு தேவையான ரொக்க பரிவர்த்தனைக்கான பணம் உடனுக்குடன் திருப்பி கிடைக்கலாம்.
6. ஜி எஸ் டி இணையதளத்தில் உள்ள குறை பாடுகள் நீக்கப்படும். அதன் மூலம் எளிதான ஜி எஸ் டி பரிவர்த்தனை நடக்க ஏதுவாகும்.
7. மத்திய மாநில அரசுகளால் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் டின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகளுக்கான ஜி எஸ் டி 18%லிருந்து 5% ஆக குறைக்கப்படும்.
8. கட்டுமானத் துறையில் உபயோகப்படுத்தப் படும் கற்களுக்கு 28% ஜிஎஸ் டிக்கு பதில் 18% வசூலிக்கப்படும்.
9. வாடகைக்கு விடப்படும் வாகனங்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படும்
இவை எல்லாம் இன்று மாற்றப்படும் என எதிர்பார்க்கப் படும் பகுதி இனங்கள் ஆகும்.