இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து! 7 பேர் பலி!

தவாங்,

ருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய-திபத்திய எல்லையான தவாங் வனப்பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ -17 வி 5 ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

இதில் விமானத்தில் பயிற்சிக்காக சென்ற 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 6 பேர் பலியானார்கள். சம்பவ இடத்தில் இருந்து படுகாயத்துடன் பயிற்சி விமானி ஒருவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவரும் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது

விபத்து நடைபெற்ற  சம்பவ இடத்தில் இருந்து உயிரிழந்த 2 பேரின் உடல் மீட்கப்பட்டன. உயிரிழந்த மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமானப்படை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Indian Air Force plane crash in Arunachal Pradesh, 5 dead