தேர்தலில் தோற்றால் மோடி தான் பொறுப்பு!! யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

டில்லி:

பணமதிப்பிழப்பு மற்றும் குளறுபடிகளுடன் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவற்றால் வேலைவாய்ப்புகள் பாதித்துள்ளது. இவை இரண்டும் எதிர்வரும் மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் கூட்டாட்சி தேர்தல்களில் மோடி நிர்வாகத்திற்கு பெரும் அச்சுறுத்துலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது’’ என்று வாஜ்பாய் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் நேர்காணலில் கூறுகையில், ‘‘தொழில் புரிவோரும், விவசாயிகளும் பெரிதும் பாதித்துள்ளனர். வேலைவாய்ப்பு வளர்ச்சி பாதித்திருப்பதால் வாக்காளர்களின் ஆத்திரத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை மோடிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புக்கு மோடி தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்’’ என்று சின்ஹா கடினமாக பேசியுள்ளார்.

பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோரது பொருளாதார கொள்கையையும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் செயல்பாட்டையும் பாஜக.வின் மூத்த உறுப்பினரான யஷ்வந்த் சின்ஹா அழுத்தமாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘வங்கி திவால் சட்டம் முதல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஜிஎஸ்டி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதற்காக மோடி அரசு பாராட்டுக்களை சம்பாதிக்கலாம். மத்திய அரசின் கொள்கைகளால் பொருளாதாரம் பாதித்துள்ள நிலையில் அதை சமாளிக்க இந்தியர்களுக்கு பல கதைகளை மோடி கூறி வருகிறார்.

இது தொடர்பாக பதில் பெற மோடியின் செய்தி தொடர்பாளர்களை போனிலும், மெயிலும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் பொருளாதார பதிவேடுகளை பாதுகாக்கும் வகையில் மோடி பேசியபோது, ‘இங்கே சிலருக்கு அவநம்பிக்கை பரப்பிய பிறகு தான் தூக்கமே வருகிறது’ என்று தெரிவித்திருந்தார்’’ என்றார்.

மத்திய அமைச்சரவையில் தனது மகன் இடம்பெறுள்ள நிலையில், சின்ஹா தொடர்ந்து கூறுகையில், ‘‘ பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு நிதியமைச்சர் தான் காரணம். இதர கட்சியினரும் இதை ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அதை பற்றி வாய் திறந்தால் தண்டிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் விமர்சனம் செய்ய மறுக்கின்றனர்.

பணமதிப்பிழப்பு குறித்த கேள்விகள் கேட்டபோது ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் மிருதுவான முறையில் நடந்து கொண்டு சரண்டராகியுள்ளார். இது அவருக்கு எவ்வித மகிமையும் பெற்றுத் தரவில்லை’’ என்றார்.

ரிசர்வ் வங்கியின் பெண் செய்தி தொடர்பாளரிடம் கருத்து கேட்ட இ.மெயில்களுக்கு பதில் அளிக்கவில்லை. இதேபோல் நிதியமைச்சக செய்தி தொடர்பாளர்களும் போனில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இ ந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாகுறை அடுத்து வரும் மாதங்களில் சிரமத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர் அஞ்சலி வர்மா கூறியதை சின்ஹா அந்த பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி அறிமுகம் செய்தபோது ஜெட்லி நிதி மற்றும் பாதுகாப்பு துறையை நிர்வகித்து வந்தார். இவை இரண்டுமே அதிக துறைகள் இருக்க கூடியதாகும். தற்போது அவர் பாதுகாப்பு துறையை திரும்ப ஓப்படைத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சகம் என்பது பெரிய அமைச்சகமாகும். ஏன் அந்த பொறுப்பை ஜெட்லி ஏற்றுக் கொண்டார்?. அதனால் தான் வேலை எதுவும் நடக்காமல் நிதியமைச்சகம் பாதித்துள்ளது. தற்போது வரை அரசின் பொருளாதார முடிவுகளை ஜெட்லி ஆதரித்து பேசி வருகிறார்.

நாங்கள் எதிர்வரும் 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவோம் என்று கூறவில்லை. நாங்கள் அதில் வெற்றி பெறுவோம். ஆனால், வேலையில்லா திண்டாட்டம் மக்களை கவலை அடைய செய்துள்ளது. இதை மக்கள் எங்களுக்கு சொல்ல போகிறார்கள். அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதெல்லாம் எங்கே?’’ என்றார்.
English Summary
Modi must 'take blame' for India's jobs crisis in looming polls says yaswath sinha