j 1

திருச்சி:

தமிழக முதல்வரின் முன்னாள் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் புராதனக் கலைப்பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்று புகார் எழுந்துள்ளது.

ஜெ.,வுக்கு பிடித்த கோயில்…

நான்கு புறமும் காவிரியால் சூழப்பட்ட அழகிய தீவு ஸ்ரீரங்கம். தனது பூர்வீகம் இந்த ஊர்தான் என்று முதல்வர் ஜெயலலிதா பெருமையுடன் பலமுறை சொல்லியிருக்கிறார். இங்குள்ள மிகப்பிரசித்தி பெற்ற ரங்கநாதர் ஆலயம், ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமானது. இந்த கோயில் இருக்கும் ஸ்ரீரங்கம் தொகுதியில்தான் கடந்த 2011ம் ஆண்டு சட்டபேரவை பொதுத்தேர்தில் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி, எம்.எல்.ஏ. பதவியை இழந்து பிறகு ஆர்.கே. நகரில் போட்டியிட்டு வென்றிருக்கிறார் ஜெயலலிதா. ஆனாலும், இன்றளவும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கும், குறிப்பாக இங்குள்ள ரங்கநாதர் ஆலயத்துக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்க தவறுவதில்லை.

இந்த அளவுக்கு ஜெயலலிதா விரும்பும், ரங்கநாதர் கோயிலில், அவரது ஆட்சியின்போதே பாரம்பரியமான சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது.

கோயிலின் பெருமை…

108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான இந்த கோயில் “பூலோக வைகுண்டம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த  கோயில் எந்த ஆண்டு, யாரால் கட்டப்பட்டது என்பதே அறிய முடியாத அளவுக்கு பலப்பல நூறு ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு க‌ட்ட‌ப்ப‌ட்டது.

அத‌ன் ‌பி‌ன் வ‌ந்த பல ம‌ன்ன‌ர்க‌ள் இ‌ந்த கோ‌யி‌லி‌ன் புனரமை‌ப்பு‌ப் ப‌ணிக‌ளி‌ல் மட்டுமே ஈடுபட்டுள்ளார்கள்.

 

j2

க‌ம்ப‌ர் ராமாயண‌த்தை அர‌ங்கே‌ற்‌றிய ம‌ண்டப‌ம் இ‌‌த்தல‌த்‌தி‌ல் உ‌ள்ளது. ராமானுஜ‌ர் சுமா‌ர் 700 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு, இ‌ந்த கோ‌யிலு‌க்கு வ‌ந்து பூஜை முறைகளை ஒழு‌ங்குபடு‌த்‌தி அமை‌த்து, இ‌ங்கேயே வாழ்ந்தார். கோ‌யி‌ல் வளாக‌த்‌தி‌ல் பெருமா‌ளி‌ன் வச‌ந்த ம‌ண்டப‌த்‌தி‌ல் உ‌ட்கா‌ர்‌ந்த ‌நிலை‌யி‌ல் சமா‌தி ஆ‌கியு‌ள்ளா‌ர்.

இந்தத் திருத்தலத்தின் பாரம்பரிய பெருமையை உணர்ந்த ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம், தனி கவனம் எடுத்து கோயிலை பாதுகாக்க முன்வந்தது. 1966ம் ஆண்டு கட்டிட மற்றும் வரலாற்று ஆய்வாளர்களை அனுப்பி கோயிலை பாதுகாக்க ஆலோசனைகள் வழங்க வைத்தது. அவர்களுள் ஒருவரான, ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும், அமைப்பையும் ஆராய்ந்து ஆங்கிலத்தில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஜீயரின் பிடிவாதம்…

கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாமல் இருந்தது. இந்த நிலையில் அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கர் அந்த மொட்டை கோபுரத்தை 236 அடி உயர கோபுரமாக கட்டி 1987ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினார்.

ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள். இந்த கோபுரம் கட்டும்போது பொறியியல் வல்லுனர்களும், வரலாற்று ஆய்வாரகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். புராதன பெருமை கொண்ட கோயிலில் மாற்றங்கள் செய்ய வேண்டாம் என்றும், பெரிய கோபுரமாக கட்டும் அளவுக்கு அஸ்திவாரம் இல்லை என்றும் கூறினர். ஆனால் அழகிய சிங்கர் பிடிவாதகமாக இருந்து கோபுரத்தை எழுப்பினார். பொறியியல் வல்லுனர்கள் சொன்னதைப் போலவே, கோயில் பக்கச் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் பொதுக்கள் அச்சமடைந்தனர். ஆகவே கோபுரத்தின் ஸ்திரத்தன்மை குறித்து தொடர்ந்து பொறியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்கின்றனர்.

மீண்டும் சோதனை…

2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில்,  கோயிலில் உள்ள வெள்ளை கோபுரத்தில் காரைகள் பெயர்ந்து விழுந்தன.  அந்த அளவுக்கு பராமரிப்பு பணி மோசமாக இருந்தது.   இந்த நிலையில்  கோயிலுக்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்பட்டது. கும்பாபிசேகம் நடக்க இருப்பதால் சில தினங்களுக்கு முன் கோயிலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, கோயிலின், பல இடங்களில் புராதனக் கலைப் பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக சுதை வேலைப்பாடுடன் கூடிய சிலைகள் அதிக அளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாக தொல்லியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதாவது, சுதை சிற்பங்கள் என்பவை முற்காலத்தில் செங்கல் மீது சுண்ணாம்பு பூசி உருவாக்கப்படுபவை. இவை பல காலம் சிதையாமல் இருக்கும் என்பதோடு, அழகாகவும் இருக்கும். இந்த சிற்பங்களை சீரமைப்பதாகச் சொல்லி, இவற்றின் மேல் சிமெண்ட் பூசி ரசாயண வண்ணங்களை பூசியிருக்கிறார்கள். இதனால் அந்த சிற்பங்களின் பாரம்பரியமே சிதைக்கப்பட்டிருக்கிறு என்ற வருத்தத்துடன் சொல்கிறார்கள் வரற்று ஆய்வாளர்கள்.

அமைச்சர் காமராஜ் பிஸி…

வரலாற்று பாரம்பரியம் மிக்க சிற்பங்கள் சிதைக்கப்பட்டது குறித்து தமிழக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். “விசாரித்துச் சொல்கிறோம்” என்பதோடு முடித்துவிட்டார்கள்.

j 3ஆகவே, அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜை தொடர்புகொண்டோம். அலைபேசியில் பேசியவர் அவரது உதவியாளர் சர்புதின். அவரிடம் விவரத்தைச் சொன்னோம். அவர், “அமைச்சர் குடவாசல் பகுதியில், அம்மா ஆட்சியின் சாதனைகளை விளக்கி பொதுமக்களுக்கு நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அப்புறம் பேசுங்கள்” என்றார்.

சற்று நேரம் கழித்து மீண்டும் தொடர்புகொண்டோம். “நோட்டீஸ் கொடுக்கறதுல பிஸியா இருக்காரு மினிஸ்டர்” என்று  அதே பதில் வந்தது.

ரங்கநாதர் கோயில், பாரம்பரிய கலைச்சின்னம் என்பதற்காகக்கூட வேண்டாம்,  பூஜை, பரிகாரங்களில் மிகுந்த நம்பிக்கை உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான கோயில் என்பதற்காகவாவது   அமைச்சர் காமராஜ் உடனடியாக தலையிட்டு கோயில் சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

முதல்வர் கவனத்திற்கு…

“இந்தக் கோயிலை, மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் அளிக்க வேண்டும் என்று ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழக அரசும் அதையே வலியுத்தினால் நல்லது. தஞ்சை பெரிய கோயில் போல  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலும் பாதுகாக்கப்படும்” என்கிறார்கள் வரலாற்று ஆர்வலர்கள்.