இந்திய  கிரிக்கெட் அணி, இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் தொடரை கடந்த மாதத்தில் 4-0 என்று இந்தியா வென்றுள்ள சூழலில், இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர் (நேற்று)  (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கியது.

பகல் இரவு ஆட்டமான இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச  முடிவெடுத்தார்.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே நன்கு அடித்து விளையாடியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 61 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 78 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 40 பந்துகளில் 62 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கபப்ட்ட 50 ஓவர்களில், 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு இங்கிலாந்து அணி  மொத்தம் 350 ரன்கள் எடுத்தது.

351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று பெரும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்க அடக்கக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் கே. எல். ராகுல் ஆகியோரது விக்கெட்டுக்களை 24 ரன்களுக்குள் இழந்து நின்றது.

வெகு நாட்களுக்கு பிறகு அணியில் இடம்பெற்ற யுவராஜ் சிங் 15 ரன்களில் ஆட்டமிழக்க, முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேதார் ஜாதவ், அணித் தலைவர் விராட் கோலியுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை இருவரும் விளாசினர். , இந்திய அணியின் ரன் விகிதம் வெகுவாக உயர்ந்தது. தனது 27-வது ஒருநாள் போட்டி சதத்தை எடுத்தா விராட் கோலி.  அவர்,122 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இளம் ஆட்டக்காரரான கேதார் ஜாதவ் 65 பந்துகளில் சதம் அடித்தார். அவர் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு, பரபரப்பான இறுதி நிமிடங்களில் ஹர்திக் பாண்ட்யாவின் அபார ஆட்டத்தால் இந்தியா 3 விக்கெட்டுக்களை வித்த்யாசத்தில் வெற்றி பெற்றது.

48.1 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்த இந்தியா வெற்றி இலக்கான 351 ரன்களை எட்டியது.

இறுதியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வென்றது.