2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது.  காங்கிரசுக்கு 41 தொகுதிகள் என்று உடன்பாடு ஏற்பட்டது.  இதையடுத்து இன்று சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து பேசினார்.  இதன் பின்னர் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டன.
கோவை தெற்கு, வேடச்சந்தூர், கரூர், திருச்சி கிழக்கு, முசிறி, ஜெயங்கொண்டம்,
திருத்தணி, அம்பத்தூர், ராயபுரம், மயிலாப்பூர், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல்,
ஆற்காடு, ஓசூர் கலசப்பாக்கம், செய்யாறு, ஆத்தூர், சங்ககிரி, நாமக்கல்,
காட்டு மன்னார்கோவில் (தனி). வேதாரண்யம், நன்னிலம், பாபநாசம், பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி, காரைக்குடி, மதுரை வடக்கு, திருமங்கலம். சிவகாசி, தென்காசி, நாங்குநேரி,
கோபிசெட்டிபாளையம், உதகமண்டலம், காங்கேயம் தாராபுரம், சூலூர்,
குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், முதுகுளத்தூர், ஸ்ரீவைகுண்டம்.
இதில் 40 தொகுதிகளில் அதிமுகவுடன் காங்கிரஸ் நேரடி போட்டியை சந்திக்கிறது. கேட்ட தொகுதிகள் கிடைத்துள்ளன; கருணாநிதியை முதலமைச்சராக்க பாடுபடுவோம்; விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று  ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்
FotorCreated1