k13

நாயகியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றும் பெரிய விஷயம்

இல்லை. சாப்டியா

என்ன பண்ற ?

இந்த ரெகுலர் டையலாகே போதும். நிறைய நேரங்களில் அவன் எழுத்து.

என்றாலும் நிறைய பேசுவதை குறைத்து கொள்கிறாள். அதை உணரும்

தருணங்கள். ஊருக்கு போகும் நாயகி நெட் ஒர்க் காரணமும், busy காரணத்தாலும்

ஆன் லைன் வரலை fb msg, whats app msg பண்ணியும் பார்கலைன்னு தெரிந்தது.

Sms ல msg (கவனிங்க msg. எழுத்துகள் அழிவதில்லை delete ஆனாலும் எடுக்க

முடியும் )

எங்க இருக்க !

எங்க போன்ன…

Sms msg பார்த்து ரிப்ளே பண்றாள்.

ஊருக்கு போயிருந்தேன் சென்னை பக்கத்தில் வந்துகிட்டு இருக்கேன்.

உடனே போன்.

Oye என்ன திடீர்னு சொல்லாம ஊருக்கு போய்ட

ஊர்ல ஒரு டெத். சொந்தக்காரவங்க… சாவு சொல்லிகிட்டா வரும்.

சரி சரி காணோமேனு கேட்டேன்.

ரெகுலர் டையலாக்ஸ்…

ஒட்டுதல் இல்லை ஒதுங்கவும் இல்லை நாயகி. முன் போல் சமைத்ததில் இருந்து

சாப்பிட்டது வரை ஒப்பிப்பது, ஒரு பிரச்சனைனா உடனே inboxல சொல்லி அழறது

இவைகளை தவிர்த்தாள். காரணம் எதையும் அவன் கவனிப்பது இல்லை

என்பதும், ஊருக்கு போறேன் னு சொல்றதும், சேர்ந்துட்டேன் ன்னு msg பண்றதும்.

குருப் பார்வட் msg னும் தெரியவருது நாயகிக்கு.எப்போதும் உன்ன பார்க்கனுன்னு

சொல்வது நாயகியா இருந்தாலும் இந்த முறை கேட்டது ஸ்ரீ…

ராசாத்தி கேட்டதும் ராசா ஓகே சொல்ல… ஏனோ பிடிக்காமல் அவாய்ட் பண்ற

நாயகி.

ஏன் வேண்டான்னு சொல்ற ?

நீ போய்ட்டு வா ஸ்ரீ

மூணு பேரும் தானே meet பண்ணுவோம்.

இல்ல நீ போ…

இரு நான் அதையே பேசசொல்றேன். அப்ப தான் வருவ…

சில நிமிடங்களுக்குள் நாயகனிடம் இருந்து போன்.

Oye கேளம்பிடீயா. (டயலாக் பேச சொல்லியா தரணும்)

எங்க ?

சரவணா பவன் வர்றேன்னு சொன்னியே.

நான் எப்ப சொன்னேன்.

என்ன பிரச்சனை உனக்கு.

உன் ராசாத்தி உன்ன miss பண்ணினா நீங்க meet பண்ணுங்க என்னை ஏன்

வரசொல்ற…

ஒன்னும் முடியலையா உனக்கு,என்னை பார்கனுன்னு உனக்கு தோணலையா.

இல்ல.

சரி எனக்கு உன்ன பார்கணும் வா…(பில்லு கொடுக்க ஆள் இல்லையோ

என்னவோ…)

இல்ல வந்து…

நிறைய சமாதானத்திற்கு பிறகு மறுக்க முடியாமல் போகிறாள். இந்த முறை

அவமானங்கள் இல்லை. எப்போது சந்தித்தாலும் ஸ்ரீ ஒரு விஷயத்தை

முயற்சிப்பாள்.

எதிர் எதிர் டேபிள்ள நீயும் நானும் உக்காருவோம் அவன் யார் பக்கத்தில்

உக்கார்றானு பாப்போம்.

எதுக்கு இந்த விஷபரிட்ச…

இரு என்னதான் பண்றான்னு பார்போம் வந்ததும் எழுந்துக்காத ஓகே.

நாயகன் யாரு கேடி பில்லா கில்லாடி ரங்காவாசே…

வந்து நின்னுகிட்டே இருக்க, ஸ்ரீயோ மாறினால் மட்டுமே உண்டு இந்த முறையும்

அதையே ட்ரை பண்றா ஸ்ரீ.

இருவரும் உறுதியாக இருக்க ஸ்ரீயே பக்கத்தில் உட்கார சொல்கிறாள். நாயகனும்

ஸ்ரீ பக்கத்தில் வேற வழியில்லாம உக்காருறான். கொஞ்ச நேரத்தில் அருகில்

இருக்கும் போது எதிரில் இருப்பது போல் முகம் பார்க்க முடியாது என்பதால் ஸ்ரீ

அவனை நாயகி பக்கம் உட்கார சொல்ல ஏற்கனவே நாயகி விலகுவதை உணர்ந்த

நாயகன் அருகில் சென்று அமர்கிறான். எப்போதும் போட்டோ எடுக்கும் பழக்கம்

உண்டு. ஸ்ரீ & நாயகியை இவனும், இவனை அவர்களும் போட்டோ

எடுப்பார்கள்.இந்த முறை மாறுகிறது. ஸ்ரீ யை நாயகனும், நாயகன் & நாயகியை

ஸ்ரீயும் போட்டோ எடுக்க, அந்த போட்டோ பின்னாளில் பெரிய பிரச்னையை

உண்டு பண்ண போகிறது என்று அப்போது யாரும் உணரவில்லை.