k12

சில நேரங்களில் அந்த பெண்மணியின் நடவடிக்கைகள் பற்றி நாயகனிடம்

சொல்லுகிறாள் நாயகி.

ஏ அவங்க இப்படி பண்றாங்க. உனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு பார்த்துக்கோ.

அவங்க அப்படி தான் விடு.

அதற்கு மேல் பேசவிரும்பாமல் விட்டு விடுகிறாள். நாயகன் தாயின் வயதில்

இருக்கும் பெண்ணை பெயர் சொல்லி அழைத்திருப்பது பின்னால்

தெரியவருகிறது. மகன் வயதில் இருக்கும் ஒருவன் தன்னிடம் உரிமையாக

ஒருமையில் அழைப்பது, அக்கறையாக பேசுவது பாவம் அந்த பெண்மணிக்கு

என்ன தோன்றியதோ.(பொண்ணு வயசில் இருக்கும் உறவுகார பெண் ஸ்ரீயை

அந்தம்மா போட்டியா நினைச்சு ஸ்ரீ அம்மா கிட்டயே கம்ளைண்டு

பண்ணினாங்கனா பார்த்துகோங்களேன்…

யாருக்கு தெரியும் நம்ம நாயகனின் லீலையோ என்னவோ ! ) நாயகி எதையும்

நேருக்கு நேர் கேட்பதால் கொஞ்சம் மனவருத்தம் அடைகிறான்.(இருக்காதா

பின்ன! நாயகனுக்கு கேள்வி கேட்டாலே பிடிக்காதே)

மனவருத்தத்தை வேறு விதமாக வெளிப்படுத்துகிறான்.மூவரும்( ஸ்ரீ, நாயகன்,

நாயகி எப்போதும் ஒன்றாக சந்தித்துகொள்வது வழக்கம்)சந்திக்கும் சமயங்களில்

நாயகியை காரணம் இன்றி காயப்படுத்துகிறான். உதாரணமாக, ஒரு சந்திப்பில் ஸ்ரீ

ஒரு அசிங்கமான செய்கை செய்ய அது பிடிக்காத நாயகி வெறுப்போடு

சிரிக்கிறாள் போது இடம் என்பதால்.

எதுக்கு பச்ச சிரிப்பு சிரிக்கிற…

அதிர்ச்சி அடையும் நாயகி

என்னையவா சொல்ற !?

ஆமா.உனக்கு ஸ்ரீ பார்த்து பொறாம

எதுக்கு நா ஸ்ரீ பார்த்து பொறாமா படணும்.

அது அழக இருக்கு, வசதியா இருக்கு, சந்தோசமா இருக்குனு.

ஏழ்மையிலும் மனதால் கூட யாரையும், எதையும் பார்த்து ஏங்காத நாயகிக்கு

இந்த வார்த்தைகள் காயப்படுத்துகிறது. காயப்படுத்தும் என்று தெரிந்தே

செய்கிறான்.(பின்ன பொண்ணுங்க உணர்வுகளை உள்வாங்கி அப்படியே எழுதும்

எழுத்தாளன் ஆச்சே.! மனோதத்துவ நிபுணரா நீங்க என்று கேட்கும் அளவிற்கு

புகழ் பெற்ற படைப்பாளி )ஒரு முறை நாயகியின் கை தழும்பை சுட்டி காட்டி

இதுல உன் புருஷன் பேரை பச்சை குத்திக்கோ.

அவர் பேரை ஏன் பச்சை குத்தனும். இதுக்கு அவர் காரணம் இல்லையே…

சில நேரங்களில் msg மூலம் தன் வருத்தத்தை அவனிடம் சொல்கிறாள்.

இப்படி எல்லாம் பேசாத pls. கஷ்டமா இருக்கு எனக்கு அப்படி பட்ட கீழ்த்தரமான

எண்ணம் எப்பவும் வராது. அதுவும் என்னோட best frd ஸ்ரீ அப்படி

இருக்கையில்…(பின்னாளில் இதையே நம்பவைத்து நாயகியை தற்கொலைக்கு

கொண்டுசெல்ல போகிறான் நாயகன் என்று அப்போது தெரியாது

நாயகிக்கு.)உடனே call & msg வரும்.

Loosu 200% விளையாட்டுக்கு சொன்னேன். சொன்ன சொல் காற்றில் கரையலாம்

எழுதிய எழுத்துக்கள். Msg எழுத்துகள் தானே!

எல்லாம் அதோடு சரி.

நாயகிக்கு எழுதும் கவிதைக்கு வரும் லைக் & கமென்ட் கள் கூட விமர்ச்சிக்க

தொடங்குகிறான்.

உன்னோட திறமைக்கு யாரும் பாராட்டல பொண்ணுனா எல்லா இப்படி தான்

வழியுவானுங்க.(அப்போது நாயகி தன் சொந்த புகைப்படத்தை கூட fb போடல)

இது போன்ற வார்த்தைகள் அவளை காயப்படுத்துகிறது.

இப்படி மெண்டலி நாயகியை டார்சர் பண்ண தொடங்குகிறான்.நாயகிக்கு இந்த

செயல்கள் காயப்படுத்த சற்று விலக நினைக்கிறாள்.

Msg & call பண்ணுவதை தவிர்க்கிறாள். சில தினங்கள் நீடிக்க, அந்த சமயத்தில்

நாயகனின் ஸ்டேடஸ் அவன் காதலியை பற்றி இருக்க call பண்றான்.

என்ன பண்ற ?

ஒன்னுல்ல…

Msg & போன் எதுவும் பண்ணல

நீ busy ன்னு நினைச்சேன்.

கோவமாக எல்லாம் எனக்கு தெரியும் என்னனு சொல்லப்போறியா இல்லையா…

ஏ… எவ்வளவு கோவபடுற. எனக்கு என் பையனை பார்க்கணும் போல இருக்கு.

ஓ… அதுக்கு தான் மூஞ்சிய தூக்கி வச்சிருக்கியா

ஆமா ஏ…

ஒன்னு இல்ல போய் பார்த்துட்டு வா.

அவர் அனுப்பமாற்றார். நீயே கோவமா இருக்க.

ஒன்னு இல்ல லூசு கேட்டுட்டு போய் பார்த்துட்டு வா சரியா.

ம்… (அந்த கோவத்தின் அர்த்தம் உங்களுக்கு புரிந்திருக்கனுமே! )