ஐபிஎல் பாணியில் டி-20 போட்டிகள் தமிழ்நாடு கிரிக்கெட்  சங்கம் அறிவிப்பு
Tamil_Nadu_Cricket_Association_logo ஐ.பி.எல் 20-20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவையே  திணறடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சென்னை கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட சூதாட்ட தடையால் தமிழ கிரிக்கெட் ரசிகர் கூட்டம் உற்சாகமிழந்து கிடக்கிறது.இதனைப்போக்கும் வகையில் ஐபிஎல் 20-20 ஸ்டைல் கிரிக்கெட்டைப்போல் தமிழ்நாடு பிரீமியர் லீக் ( டி-20 கிரிக்கெட்) போட்டியை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. இப்போட்டிகள் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தொடங்கி  செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
n-srinivasans-tnca-will-be-represented-by-the-state-associations-vice-president-ps-ramanஇதில் எட்டு அணிகள் இடம்பெறும். அணிகளை உரிமை கொள்வதற்கான டெண்டர்கள் விடப்படும்.  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள் . இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும். ஆட்டங்கள் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் நடைபெறும். அணிகள் தேர்வுக்கான டெண்டர் பணிகள் இந்த மாதத்தில் இறுதி செய்யப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
20140529094858 ‘இந்த போட்டி தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல பலன் அளிப்பதாக அமைவதுடன், உள்ளூர் 20 ஓவர் போட்டிகளுக்கு தயாராகவும் உதவிகரமாக இருக்கும் . சென்னையை தவிர்த்து வெளிமாவட்டங்களில் உள்ள வீரர்களுக்கு மாநில அளவிலான போட்டியில் விளையாடுவதற்கு முன்பு வெளியே தெரியாத நிலை உள்ளது. இதுபோன்ற அந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.’ என்றார் தமிழ்நாடு பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் வீரரான எல்.பாலாஜி.