வேலூர்
திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்.
இன்று வேலூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. திமுகவின் முக்கியத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டர்னர். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உதயநிதி தனது உரையில்
”எந்தக் கொம்பனாலும் திமுக இயக்கத்தைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பார் கருணாநிதி. .இப்போது இயக்கத்தை மட்டுமின்றி இங்குள்ள எந்தவொரு கிளை செயலாளரையும் கூட தொட்டுக் கூட பார்க்க முடியாது.. கட்சியின் பல்வேறு அணிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இளைஞரணி சார்பில் நூலகம், பேச்சுப் போட்டி, மாரத்தான் போட்டிகளை நடத்துகிறது. பலர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.. இப்போது நான் வேலூர் வந்த போதும், என்னைச் சூழ்ந்து கொண்டு இந்தத் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்கள்.. இது இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக உள்ளது.
இந்த மாநாடு இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய மாநாடாக இருக்கும். கடந்த 2021இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் நாம் அடிமைகளை விரட்டி அடித்தோம். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அடிமையின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்”
என்று தெரிவித்தார்.