சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அளித்த  கெடு நிறைவுபெற்றுள்ளதால், தேர்தலை நடத்தி முடிக்க  கூடுதல் நாட்களை அனுமதிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில்  கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 27-க்குள் உள்ளாட்சி தேர்தலை  நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர்  மாதம் கெடு விதித்தது. அதன்படி இன்றுடன் கெடு முடிவடைகிறது. இதையொட்டி, நேற்று ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த நிலையில்,  மாநில தேர்தல் ஆணையம் சார்பில்  40 நாட்கள் கூடுதல் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  மேலும், தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விவரம் குறித்த தேர்தல் அட்டவணையையும்  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேலும், தேர்தல் நடத்த கூடுதலாக எடுத்துக்கொண்ட நாட்களுக்கு அனுமதி வழங்க மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.