சென்னை:
தொடர்ந்து மழை பெய்து, வெள்ளம் பெருகி சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களையும், பொட்டல சோத்துக்கு ஏங்க வைத்துவிட்டது பெருமழை. வீட்டு படுக்கை அறைவரை தண்ணீரும் அதனோடு தண்ணீர் பாம்புகளும் வந்து அலறினர் புறநகர் மக்கள். சாலையில் படகு போக்குவரத்து நடந்த அதியதத்தையும் கண்டனர்.
கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது மழை பெய்து பயமுறுத்தினாலும், சூரியபகவானின் கடாட்சமும் கிடைத்துவருகிறது.
முன்பு போல மூன்ற நீரில் பேருந்துகள் நீந்திப்போக, பேருந்துக்குள் ஜன்னல் சீட் எல்லாம் (தண்ணீர்) காலியாக கிடக்க.. மூச்சைப் பிடித்துக்கொண்டு பயணித்தனர் சென்னை வாசிகள்.
இப்போது இரண்டு நாட்களாக கொஞ்சம் பரவாயில்லை. ஜன்னலோரம் தூங்கிக்கொண்டு, பூ தொடுத்துக்கொண்டு, அலுவல் வேலையை பேருந்திலேயே வழக்கம் போல் பார்த்துக்கொண்டு பயணிக்கிறார்கள்.
இது தொடருமா என்பதுதான் பயமுறுத்தும் கேள்வி.
படம்: பேருந்து பயணத்தினூடே ப்ரூப் பார்த்தபடி செல்கிறார் பத்திரிகையாளர் ஒருவர்.,