இன்றைய மருத்துவபலன் (06-10-16) வியாழக்கிழமை
தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம்.கடைசியாக நாம் குடும்பமாக சீக்கிரம் உறங்கிய நேரம் எப்போது என நீங்கள் யோசித்து ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.
பத்து வருடத்திற்கு முன் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்கு விளக்கை ஆப் செய்துவிட்டு தூங்கியது தான் வழக்கமாக இருந்தது.
ஆனால், இன்று பல வீடுகளில் அம்மா, அப்பா வீட்டிற்கு வருவதே 8 – 10 மணிக்குள் தான். போதாக்குறைக்கு ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவிக்கள் வேறு….
தூக்கமின்மை!
24X7 மொபைல் மற்றும் இணையத்தில் அதிகமாக நேரம் செலவிடுவது பொழுதுபோக்காக இருப்பினும், வேலையாக இருப்பினும் கணினி முன்பே அமர்ந்திருப்பது உறக்கத்தை வலுவாக கெடுக்கிறது இதற்கு கண்டிப்பாக தூக்க மாத்திரைகள் நிரந்தர பயனளிக்காது.
மனநல சீர்கேடு!
நல்ல உறக்கம் என்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. உறக்கம் சீர்கெட்டு போனால், மனநலம் சீர்கேடும். மனநலம் பாதிப்பது உங்கள் வேலை, உறவு என உங்கள் அன்றாட வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்.
பூண்டு!
இதற்கான நல்ல உறக்கத்தை பெறுவதற்கான தீர்வு உங்கள் சமையல் அறையிலேயே இருக்கிறது.
ஆம், தினமும் உறங்கசெல்வதற்கு முன்னர் உங்கள் தலையணைக்குகீழ் ஒருபூண்டுபல்லைவைத்துவிட்டு உறங்குங்கள்.
தன்மை!,
பூண்டின் லேசான உஷ்ணம் மற்றும் மூலிகை நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்கவித்து, தூக்கமின்மை கோளாறை சரிசெய்ய உதவுகிறது.
நன்மைகள்!
பூண்டு ஒரு சிறந்த மூலிகை உணவுப் பொருள். உங்கள் அன்றாட உணவில் தினமும் சிறிதளவு பூண்டை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேலோங்க வைக்கும். பூண்டு, சளி தொல்லை, தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள் அடைப்புகள், கல்லீரல் நலன் மற்றும் நோய் எதிர்ப்பு என பல நன்மைகள் புரிந்து உதவுகிறது.
நல்ல உறக்கம் தருவது மட்டுமின்றி, முடி உதிர்தல் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சனை கோளாறுகளுக்கும் பூண்டு ஒரு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.
இயற்கை மருத்துவம் அங்கீகாரம் பெற்ற ஆலோசகர் சிவசித்தன் அருண்:9094830243