1
மாமண்டூர்: தே.மு.தி.க. – ம.ந.கூட்டணி கூட்டம் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் விஜயகாந்தின் கல்லூரி வளாகத்தில் நடந்தது.  ம.ந.கூட்டணி தலைவர்களோடு, விஜயகாந்த் பிரேமலதா ஆகியோரும் பேசினர்.
சமீபத்தில் எந்தக் கூட்டத்திலும் பேசாத விஜயகாந்த், சிகிச்சை பெற்று வருவதக தகவல் பரவியிருந்தது. இந்தநிலைில் சிறிய இடைவேளைக்குப் பிறகு விஜயகாந்த் பேசினார். ஆனால் வழக்கம் போல குழறுபடியாகவே அவரது பேச்சு இருந்தது. கோர்வையாக தெளிவாக இல்லை.
அவர் பேசியதிலிருந்து புரிந்துகொண்டது இதுதான்:
“அதிமுகவிடம் இருந்து நான் ரூ1,500 கோடி பணம் வாங்கியதாக சொல்வது பொய்… ஒரு பைசாகூட நான் வாங்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிரி கருணாநிதி; கருணாநிதிக்கு எதிரி ஜெயலலிதா. அவர்கள் இருவருக்கும் எதிரி இந்த விஜயகாந்த்தான்.
மு.க.ஸ்டாலினுக்கு எதிரி அவரும் அவரது எண்ணங்களும்தான்…!
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொல்கிறார் ஜெயலலிதா.  ஆட்சியில் இருந்த இந்த ஐந்து வருடத்திலேயே இதை செய்திருக்கலாமை.  இதற்காக சசிபெருமாள் உயிரிழந்தாரே..!
எனக்காக சிறை சென்ற குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருகிறேன்… மற்றவர்களிடம் கேட்கமாட்டேன். எனக்கும் திருப்பி அடிக்க தெரியும். ஆனால் மக்கள் கொடுத்த பதவியை மதித்தே அமைதியாக இருக்கிறேன். மாமண்டூர் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும்? நல்லவர்களைக் கொண்ட எங்கள் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்” என்று விஜயகாந்த் பேசினார்.
9.35 மணியளவில்தான் பேசத் தொடங்கிய விஜயகாந்த், பத்து நிமிடங்கள் மட்டுமே பேசினார். அதாவது தேர்தல் கமிசன் உத்தரவுப்படி கூட்டத்தை முடிக்க 15 நிமிடங்களுக்கு முன்பே தனது பேச்சை முடித்துக்கொண்டார்.
“எந்த ஒரு விஷயத்தையும் கோர்வையாகவும் பேசமுடியாமல் மிகவும் திணறித் திணறி பேசினார்.