கோள்கள் மோதல்
விண்வெளி கோள்கள் மோதல்
2009 ஆம் ஆண்டு   இதே நாள், விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் இரிடியம் 33  மற்றும் காஸ்மாஸ்-2251 ஆகிய   இரண்டு செயற்கைக் கோள்கள் மோதிக்கொண்டன.  பூமியில் இருந்து 789 கிலோமீட்டர்கள் உயரத்தில் சைபீரியாவின் நேர் மேலே இந்த விபத்து நேர்ந்தது.   இவை  42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இரிடியம் செயற்கைக் கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. காச்மாசு 2251 ரஷ்யாவிற்குச் சொந்தமானது.
 
போரிஸ் பாஸ்ரர்நாக்
போரிஸ் பாஸ்ரர்நாக்  பிறந்தநாள் (1890)
ரஷ்யக் கவிஞரும், புதின எழுத்தாளருமான, போரிஸ் லியோனிடவிச் பாஸ்ரர்நாக்   தனது இலக்கிய பணிக்காக1958 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
பல கவிதைத் தொகுதிகளையும் இவர்,  வெளியிட்டார். The twins I the clouds,  Over the Barriers, My sister Life போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஷேக்ஸ்பியரின் படைப்புகளை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
 
400px-AleksandrPushkin
புஷ்கின் நினைவு நாள் (1837)
சிறந்த ரஷ்ய மொழி கவிஞரான புஷ்கின் முழு பெயர் அலெக்சாந்தர் செர்கேயெவிச்  புஷ்கின் என்பதாகும்.  இவர் சிறந்த நாடக ஆசிரியராகவும் விளங்கினார். இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியவர்.