நியூயார்க்

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பால் குருக்மேன் இந்தியாவில் வேலைவாய்ப்பு மேலும் குறையும் என எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் வேலை இன்மை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வேலை செய்யும் வயதுடைய இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் அந்த அளவு வேலைவாய்ப்பு அதிகரிக்காததே இந்த நிலைக்கு காரணம் என பலரும் கூறி வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் பால் குருக்மேன் கடந்த 2008 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.

பால் குருக்மேன் சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்வில். “தற்போது செயற்கை நுண்ணறிவு என்பது உலகெங்கும் பரவி வருகிறது. இதை மருத்துவராகக் கொண்டு தற்போது இந்தியாவின் நோயை நீக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவின் தற்போதைய மிகவும் அபாயமான நோய் வேலை இன்மை என்பதாகும்.

ஜப்பானில் தற்போது பணிபுரியும் வயதினர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளந்து. ஆகவே இனி அந்நாடு சூப்பர் பவர் நாடு என்னும் நிலையில் இருந்து கீழிறங்கி விடும். சீனாவிலும் இதெ நிலை உள்ளது. தற்போது ஆசிய நாடுகளில் உற்பத்தித் துறை மிகவும் பின் தங்கி உள்ளது. சேவை துறையும் அதே நிலையில் உள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியாவின் வேலை இன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் வளரும் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற அளவு வேலை வாய்ப்புக்களை உருவாக்காமல் உள்ளதே ஆகும். இப்படியே சென்றால் ஒரு நாள் இந்தியர்கள் அனைவருமே வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ள நிலை உண்டாகும்.

இந்தியா தற்போது வளர்ந்து வரும் நாடாகும். தற்போதைய நிலையில் உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறை ஆகிய இரு துறைகளுமே மிகவும் பின் தங்கி உள்ளன. ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளும் இதில் பின் தங்கி உள்ள நிலையில் இந்தியா இந்த நேரத்தை பயன்படுத்த வேண்டும். உற்பத்தித் துறை வளர்ந்தால் மட்டுமே சேவைத் துறை வளர்ச்சி அடையும்.

அதனால் தற்போது இந்தியா உற்பத்தி துறையில் முழு கவனம் செலுத்த வேண்டும். பல நாடுகளில் தேவையான அளவு ஊழியர்கள் இல்லாததால் உற்பத்தித் துறை மிகவும் பின் தங்கி உள்ளது. இந்தியாவில் ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர். ஆகவே இந்தியா உற்பத்தி துறையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்” என தெரிவித்துள்ளார்.