சென்னை: ஆளுநர் உரையின்போது ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக, ஆளுநர் உரைக்கு வருத்தமும், நன்றியும் என சட்டப்பேரவை செயலர் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த ஆண்டில் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் உரை, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் கோஷம், கோஷமிட்டவர்களை தடுக்கா அவைத்தலைவரின் நடவடிக்கை, ஆளுநரின் மரபுமீறிய பேச்சு, அதுகுறித்து மரபு மீறிய தீர்மானம், ஆளுநரின் வெளிநடப்பு என பல மரபுமீறிய செயல்களால், தமிழக சட்டப்பேரவைக்கு களங்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஆளுநரில் சட்டப்பேரவை உரைக்கு வருத்தமும், நன்றியும் பதிவு செய்ய கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் எழுதியுள்ளார். சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியதற்கு பேரவை வருத்தத்தை பதிவு செய்கிறது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
, “தமிழக அரசு அனுப்பிய, ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட, அவரது உரையில் சில பகுதிகளைத் தவிர்த்துவிட்டு, கவர்னரின் செயலுக்காக இந்த அவை தனது வேதனையை பதிவு செய்கிறது. என தெரிவித்து, சட்டச்பை செயலாளர் என்.இராமகிருஷ்ணன் எழுதிய கடிதம் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வழங்கப்பட்டது.