veeramani
திருச்சி சிறுகனூர் பெரியா உலகம் திடலில் 19.3.2016ல் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 17வது தீர்மானம் இது:
’’அயோத்தியில் ஏற்கெனவே இருந்த பாபர் மசூதியை சட்ட விரோதமாக இடித்தவர்கள், இப்பொழுது அந்த இடத்தில் ராமன் கோவில் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோதமானதாக இருப்பதாலும், அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்களே, அவ்விடத்தில், ராமன் கோவிலைக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால், அது நாடு தழுவிய அளவில் பெரும் மதக் கலவரத்திற்கு வித்திடும் என்பதாலும், இந்தக் கால கட்டத்திலேயே அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், சட்ட விரோதக் காரியத்தில் ஈடுபடுவோர்மீதும், வன்முறைப் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொள்ளவேண்டும் என்று ம் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்ற முறையில் பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அயோத்தியில், ராமன் கோவிலைக் கட்டும் சட்ட விரோத, நியாய விரோத செயலுக்குத் துணை போகுமானால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முழுப் பொறுப்பும் பி.ஜே.பி. மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசையே சாரும் என்பதை இச்செயற்குழு திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்துகிறது.’’