சென்னை

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

”தற்போது தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி , புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.