பிரிக்க அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்களில் வென்றதன் மூலமாக, டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்தியா அணி.

நான்காம் நாள் ஆட்டம் முடிவதற்குள்ளாகவே இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்துபோனது. இதை மனதில் வைத்தோ என்னவோ, இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்காமல், தென்னாப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்தார் இந்தியக் கேப்டன் கோலி.

நான்காம் நாளின் முதல் ஓவரிலிருந்தே ஆடத்தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை மீண்டும் பேட்டிங் செய்ய வைக்கும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஏனெனில், அந்த அணி டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை அவ்வளவு எளிதில் வீழ்ந்து விடக்கூடியதல்ல.

ஆனால், இந்தியப் பந்துவீச்சாளர்கள் அதற்கெல்லாம் வாய்ப்புக் கொடுக்கவில்லை. மொத்தம் 67.2 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்துவிட்டனர்.

ஆடுகளம் வேகம் மற்றும் சுழற்பந்து ஆகிய இரண்டுக்குமே சமமாக ஒத்துழைத்துள்ளது என்று சொல்லும் வகையில், இரண்டு வகைப் பந்துவீச்சாளர்களுமே தலா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்க அணியில் யாருமே அரைசதம்கூட அடிக்கவில்லை. கிட்டத்தட்ட அதை நெருங்கி 48 ரன்கள் அடித்தவர் டீன் எல்கர்தான். பவுமா 38 ரன்களும், ஃபிலாண்டர் 37 ரன்களும், மகராஜ் 22 ரன்களும் அடித்தனர்.

இன்றும் ஃபிலாண்டர் – மகராஜ் இணை இந்தியாவுக்கு, ‍நேற்று மாதிரியே கட்டையைக் கொடுக்க முயற்சித்தது. ஆனால், அவர்களின் முயற்சி இன்று வெற்றியடையவில்லை. ஃபிலாண்டரை உமேஷ் யாதவ் பெவிலியன் அனுப்பிவிட்டார். மகராஜை தன் பங்கிற்கு ஜடேஜா வெளியேற்றினார்.

நேற்று 275 ரன்கள் வரை தாக்குப்பிடித்த தென்னாப்பிரிக்க அணி, இன்று ஒருநாள் முடிவதற்குள் மொத்தமாக 189 ரன்களுக்கெல்லாம் நடையைக் கட்டிவிட்டது.

உம‍ேஷ் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் இஷாந்த் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.