வைரலாக பரவும் ஸ்டில்கள்! அதிர்ந்த சூர்யா!

Must read

sur

சென்னை:

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 24. படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ஆக்க்ஷன் கலந்த திரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரஜினி நடிக்கும் கபாலி விஜய் நடித்த புலி, அஜித் நடிக்கும் வேதாளம், ஆகிய படங்களின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் திடுமென வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்துவரும் 24 படத்தின் ஸ்டில்கள் இதுவரை வெளியாகவில்லை.  அந்த அளவுக்கு கண்கொத்திப் பாம்பாக கவனித்து வருகிறார்கள் படக்குழுவினர்.

புகைப்படங்களை வைத்து கதையை கணித்து விடலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கையாம். இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் கட்டுக்காவலையும் மீறி   24 படத்திலிருந்து சூர்யாவின் வித்தியாசமான சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அந்த படங்களைப் பார்க்கும்போது சூர்யாவுக்கு இரட்டை வேடம் என்பது தெரிகிறது. ஒரு புகைப்படத்தில் மீசை இல்லாத தோற்றத்திலும் மற்றொரு புகைப்படத்தில் மீசையுடனும் சூர்யா காட்சியளிக்கிறார். ஆனால் இந்தப் படத்தில் சூர்யா 3 விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார்  என்றும் ஒரு தகவல்.

இந்த புகைப்படங்கள் தற்போது ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. இவற்றை இணையதளங்களில் வெளியிட வேண்டாம் என்று படக்குழு சார்பிலிருந்து சூர்யா ரசிகர்களுக்கு கோரிக்கையும் விடுத்திருக்கிறார்கள்.

இப்படி ஸ்டில்கள் வெளியானது  படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. குறிப்பாக நாயகன் சூர்யா, ரொம்பவே அதிர்ந்து போயிருக்கிறார். (சொந்தப்படம் ஆச்சே!).

More articles

Latest article