சிட்னி:
நவீனங்கள் வளர வளர அதற்கு ஏற்ப புது புது வியாதிகள் வர தொடங்கிவிட்டன. அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்தால், கண், கழுத்து, மூளை போன்றவை பாதிக்கப்பட்டு வந்தது. இப்போது மக்களிடம் அதிகம் பரவி வருவது ஸ்மார்ட் போன்கள்.
சாதார செல்போனை வைத்திருந்தால் ஏலனமாக பார்க்கும் நிலை வந்துவிட்டது. அதனால் ஸ்மார்ட் போன்களுக்கு மாறிய பலருக்கும் புது வியாதிகள் வரத் தொடங்கிவிட்டன.
ஒரு நாளை 6 மணி நேரம் ஸ்மார்ட் போன்களை தேய் தேய் என்று தேய்பவர்களின் விரல்கள் குட்டையாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு, விரல்கள் மிகவும் மெலிந்து போகும் வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலியா கர்டின் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் கூறியதாக சிட்னியில் இருந்து வெளியாகும் மார்னிங் ஹெரால்டு என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன்களின் எடைக்கு ஏற்ப அதை தாங்கி பிடிக்கும் சிறிய விரல் வளைந்து போகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது போன்ற அறிகுறிகள் விரல்களின் நுனியிலேயே அதிகம் ஏற்படுமாம். ஸ்மார்ட் போன்களின் அகலம், உயரம் அதிகரிக்க அதிகரிக்க கட்டை விரலை அதிக தூரத்துக்கு தேய்க்க வேண்டிய அவசியம் ஏற்படுவதால் விரல்கள் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க வேண்டும் என்றால் நீண்ட நேர ஸ்மார்ட் போன் பயன்பாட்டை கைவிட வேண்டும்.
மற்றொரு வியாதி ‘வாட்ஸ்அப்டீஸ்’. இது வாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்தினால் வரக்கூடியது. ஸ்பெயினில் ஒரு பெண்ணுக்கு கை மணிக்கட்டு பகுதியில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது. 34 வயதான அந்த பெண் மருத்துவரை அணுகியுள்ளார். மருத்துவர் மேற்கொண்ட பரிசோதனை மற்றும் விசாரணையில் அந்த பெண் அதிக நேரம் வாட்ஸ் அப் பயன்படுத்தியது தெரியவந்து.
ஒரு நாளைக்கு 6 மணி நேரம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர் தகவல்களை டைப் செய்து அனுப்பியுள்ளார். அதனால் அவருக்கு மணிக்கட்டு வலி ஏற்பட்டிருப்பதாக ஸ்பானிஷ் மருத்துவர் பெர்னாண்டஸ் மருத்துவ இதழில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு வாட்ஸ்அப்டீஸ் என்று பெயரிட்டுள்ள அந்த மருத்துவர், அந்த பெண்ணுக்கு மருந்துகள் வழங்கியதோடு, மொபைல் போனில் மெசேஜ் அனுப்புவதை தவிர்க்குமாறு கூறியுள்ளார்.
அதனால்.. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் உஷராக இருங்கள்.