வாட்ஸ் அப்பில் தகவல் திருட்டை தடுக்க பாதுகாப்பு வசதி அறிமுகம்

Must read

whatsapp_2251166f
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் வாட்ஸ் அப் முக்கிய இடம் வகிக்கிறது. வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாற்றம் நடைபெறும் போது, ஹேக்கர்கள் எனும் இணைய திருடர்கள் இடையில் குறுக்கிட்டு தகவல்களை முழுவதுமாக பெற வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டில், தகவல் பரிமாற்றத்தின் போது, தகவல் திருட்டை தடுக்கும் வகையில் முழு பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் தெளிவில்லாத எழுத்துகளாக இணையம் மூலம் பரிமாறப்படும். அதற்கு உரிய ரகசிய எழுத்துகளை பயன்படுத்தாமல் தகவல்களை அறிந்து கொள்ள முடியாது. இந்த ரகசிய எழுத்துகள், தகவல்களை அனுப்பும் மற்றும் பெறும் நபரின் வாட்ஸ் அப்பில் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
இதன்மூலம் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், அழைப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகள், வாய்ஸ் மெசேஜ்கள் அனைத்தும் முழுவதுமாக பாதுகாக்கப்படும். இந்த தகவல்கள் அனைத்தும் எண்களாக மாற்றப்பட்டு அனுப்பப்படும்.
தகவல் பரிமாற்றத்தின் போது இடையில் யாரேனும் தகவல்களை திருடினால், அதன் உண்மை தகவல்களை அறிந்து கொள்ள முடியாது. இந்த வசதி அனைத்து வகையான ஓ.எஸ் பயன்படுத்தும் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

More articles

Latest article