வருகிறது ஆண்களுக்கான கர்ப்பதடை சாதனங்கள்

Must read

pharmaceuticals
2018-2020 ஆண்டுகளில் ஆண்களுக்கான கர்ப்பதடை சாதனங்கள் அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
ஆண்களுக்கான கர்ப்பதடை சாதனமாக வெளிவரவிருக்கும் வாசல்ஜெல் என்ற ஊசியும், ஜெண்டரூசா என்ற மாத்திரையும் தற்போது இறுதிக்கட்ட ஆய்வில் இருக்கின்றன.
வாசல்ஜெல் என்பது ஒரே ஒரு ஊசியின் மூலம் செய்யப்படும் நிரந்தர கர்ப்பத்தடை ஆகும். இந்த ஊசி போட்டபின்பு குழந்தை வேண்டுமென விரும்பினால் இந்த மருந்தின் செயல்பாட்டை முறிப்பதற்கு இன்னொரு மருந்து அவ்வளதான். குழந்தை பெற்றுக்கொள்ள பிறகு தடையில்லை.
இதெல்லாம் ஆண்கள் செய்வார்களா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ஆண்கள் வாசக்டமி என்ற கர்ப்பத்தடை செய்துகொள்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த ஊசி வாசக்டமியை விட சக்தி வாய்ந்தது, நம்பகமானதுமாகும் என்று இதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். எனவே மேற்கத்திய நாடுகளில் இந்த ஊசிக்கு ஆண்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இது ஒருபக்கம் இருக்க, ஜெண்டரூசா என்ற மாத்திரை விந்தணுவை செயலிழக்க செய்து கருத்தரிப்பதை தடுத்துவிடும். வாசல்ஜெல் ஊசி வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்த மாத்திரையை தெரிவு செய்து கொள்ளலாம்.
இவை இரண்டும் போக ஆண்டி-எப்பின் ஏஜண்ட் என்ற மாத்திரை விந்தணுக்கள் நீந்திச் செல்வதையே தடுத்துவிடுமாம்.
இதுபோல இன்னும் எவ்வளவு கர்ப்பதடைச் சாதனங்கள் வந்தாலும் ஆணுறையின் மவுசு குறையாது என்கிறார்கள். காரணம் ஆணுறை கர்ப்பத்தடையை மட்டுமன்றி பால்வினை நோய்களிலிருந்தும் ஒருவரைப் பாதுகாக்கிறது.

More articles

Latest article