அஜீத், ரத்தினம்
அஜீத், ரத்தினம்

ஜீத் நடித்திருக்கும் வேதாளம் திரைப்படம் கடந்த 10ம் தேதி தீபாவளி அன்று உலகம் முழுதும் வெளியானது.

படத்தின் முதல் ஷோ முடிவதற்கு முன்பே, “இத்தனை கோடி வசூல்” என்று பலரும் பலவிதமாக இணையங்களில் தகவல் பரப்பினர்.

“8 கோடி. 10 கோடி, 15 கோடி” என்று ஏலம் கேட்பது போல வசூல் தொகையை ஆளாளுக்கு வெளியிட்டார்கள்.     இதையெல்லாம் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்துக்கு டென்ஷன் ஆகிவிட்டது.

“வெளிநாடுகள் சிலவற்றில்தான் உடனடியாக கலெக்ஷன் தொகையை தெரி்ந்துகொள்ளும் அளவுக்கு நவீன வசதி இருக்கிறது. ஆனால் இங்கோ கொட்டாம்பட்டியில் நூறு கோடி வசூல், அதிராம்பட்டினத்தில் ஆயிரம் கோடி வசூல்னு ஆளாளுக்கு கிளப்பி விடுறாங்க. உண்மையைச் சொன்னா படத் தயாரிப்பாளரான எனக்கே வசூல் தொதை நிலவரம் இன்னும் சரியா தெரியல..!” என்கிறார் ரத்தினம்.

“இவங்க இஷ்டத்துக்கு எழுதி.. என் வீட்டுக்கும் இன்கம்டாக்ஸ்காரங்கள வர வச்சிடுவாங்க போலிருக்கு” என்றும் தன் நண்பர்களிடம் புலம்புகிறாராம் !

மாஸ் ஹீரோவை வச்சு படம் எடுக்கிறவரையே பொடிமாஸ் ஆக்கிடறாங்களே, இணையத்துல!