முடிஞ்சது “தெறி”… ரிலீஸ் எப்போது?

Must read

DTcuR3aj
விஜய்யின் “தெறி” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மைனஸில் குளிரடிக்கும் லடாக்கில் பொங்கல் திருநாளான நேற்று, படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைத்துவிட்டார்கள். இனி படத்தினஅ போஸ்ட் புரடக்சன் வேலைகள்தான்.
டைரக்டர் அட்லி இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார் என்கிறார்கள். காரணண், படத்தின் நாயகி, எமி கொடுத்த குடைச்சல்கள்தான்.
“படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை, வந்தாலும் தலைவலி என்று கேரவேனுக்குள்  போய் உட்கார்ந்துகொள்வார்..  இவரால் டைரக்டர் அலி பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல…” என்கிறார்கள் கோலிவுட்டில்.
அது சரி ரிலீஸ் எப்போதாம்?
இது பற்றி அவ்வப்போது வேறு வேறு தகவல்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால் இப்போது உறுதியாக, “மார்ச் ரிலீஸ்” என்கிறார்கள்.
“இந்தப் படத்தின் டப்பிங் முடித்த கையோடு, அடுத்த படமான பரதன் படத்துக்கு அரிதாரம் பூசப்போகிறார் விஜய்” என்கிறார்கள்.

More articles

Latest article