diabetic
பாஸ்டன்:
வீட்டில் ரேசன் கார்டு இருக்கா? பாஸ்போர்ட் இருக்கா? என்ற அத்தியாவசிய கேள்வியை போல், வீட்டில் யார்? யாருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று கேள்வி கேட்டுக்கும் நிலை தற்போது உலகம் முழுவதும் நிலவுகிறது. உலகளாவிய இப்பிரச்னைக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக ஒரு ஆராய்ச்சியில் முடிவு அமைந்துள்ளது.
இது சர்க்கரை நோயளிகளுக்கு இனிப்பான செய்தி தான். ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டவுக் மெல்டன் என்பவரது மகன் குழந்தையாக பருவத்தில் இருந்தே முதல் தர சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தான். இதற்கு தீர்வு காணும் விதமாக தான் அந்த பேராசிரியர் இந்த ஆராய்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டு வெற்றி கண்டுள்ளார்.
இவரது 23 ஆண்டுகால முயற்சியால் மனித ஸ்டெம் செல் மூலம் சர்க்கரை நோய்க்கு தீர்வு கிடைக்கிறது என்பது இந்த ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்கா மருத்துவமனைகள் மற்றம் ஆராய்ச்சி நிறுவனங்கள், ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவை ஸ்டென் செல்களை எலிக்கு செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டனர். 6 மாதத்தில் இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆம், ஸ்டென் செல்களை செலுத்தி மறு விநாடியே எலியில் உடலில் சர்க்கரை நோய்க்கு தீர்வு கிடைக்கும் இன்சுலின் உற்பத்தியாக தொடங்கியது.
மனித உடலில் இருந்து கிடைக்கும் இந்த ஸ்டெம் செல்களால், அந்த மனித உடலின் செயல்பாட்டுக்கு எந்த வகையிலும் பயனளிக்காகது. அதனால் அந்த ஸ்டெம் செல்களை பாதுகாத்து வைத்தால், அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்பதை விஞ்ஞாணம் நிரூபித்துள்ளது. இங்கிலாந்தில் மட்டும் 4 லட்சம் மக்கள் பாதித்துள்ள முதல் வகை சர்க்கரை நோயை இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் குணப்படுத்திவிடலாம்.
அடுத்த கட்டமாக ஒரு சில ஆண்டுகளில் மனித உடலில் இதை செலுத்தி பரிசோதிக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல ஆண்டுகள், பல மாதங்களுக்கு தினமும் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் கொடுமையில் இருந்து இந்த புதிய கண்டுபிடிப்பு  மூலம் விடுபடலாம்.
‘‘மருத்துவ துறையில் இந்த ஆராய்ச்சி பெரும் சகாப்தத்தை படைத்துள்ளது. மனித உடலில் உள்ள ஸ்டெம் செல்களை தவிர மற்ற செல்கள் மூலம் இன்சுலின் உற்பத்தியை மேற்கொள்ள முடியவில்லை. கணைய பீட்டா செல்கள் மூலம் இன்சுலின் உற்பத்தி செய்ய கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அது பாரம்பரிய மற்றும் நீண்ட நாள் வளர்க்க கூடிய வகையில் தான் உள்ளது’’ என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முடிவுகள் நியூயார்க் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.