மக்களே… மக்களே!

Must read

n
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதியில் 2009 இடைத்தேர்தல் நடந்தது. திருவைகுண்டம் தான் தோழர். நல்லகண்ணு பிறந்த ஊர்.
இடதுசாரி கட்சிகள் சார்பாக சிபிஐ போட்டியிட்டது.நல்லகண்ணு தெருத்தெருவாகப் போய் பிரச்சாரம் செய்தார்.

அந்தத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்து மக்களுக்கு,சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து நிலப்பட்டா வழங்கப்படவில்லை எனக்கோரி,அந்தக் கிராமத்து மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.
நல்லகண்ணு அந்த மக்களிடம் பேசி ஊரைத்திரட்டி, அவர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மறியல் செய்தனர்.கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தேர்தலுக்கு பத்து நாளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது. ஊரே மகிழ்ச்சியில் திளைத்தது.நல்லகண்ணுவை ஊருக்கு அழைத்துப் பாராட்டுவிழாவெல்லாம் நடத்தினார்கள்.
அந்த ஊரில் மொத்தவாக்கு 3800.
பட்டா வாங்கியதில் பலன் பெற்றோர் 3500.
பதிவான வாக்கு 3100.
நல்லகண்ணு கட்சி வேட்பாளருக்கு கிடைத்த ஓட்டு 170.
வாக்குகள் என்பது சிந்தனை மாற்றத்தில் இருந்து உருவாவது.உதவிகள் செய்வதால் உருவாகுவதல்ல என்பதை கம்யூனிஸ்ட்கள் அறிவார்கள்.
ஒரு சமூகத்தின் சிந்தனை மட்டம் எதுவாக இருக்கிறதோ அதற்கேற்ற அரசையே அந்தச் சமூகம் தேர்ந்தெடுக்கும் என்றார் லெனின்.

More articles

Latest article