மும்பை:

மகாராஷ்டிராவில் சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நீர்நிலைகள், ஆறு, அணைகளில் தனியார் நிறுவனங்கள் பேனல்கள் அமைத்துக் கொள்ள மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மகராஷ்டிராவில தற்போது 624 மெகாவாட் சோலார் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதை 3,200 மெகாவாட்டாக உயர்த்த, அதாவது மொத்த புதுப்பிக்கத்த மின் உற்பத்தியான 7,839 மெகாவாட்டில் சோலாரின் பங்களிப்பு 40 சதவீதம் என்ற இலக்கை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் 34 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மாநில அரசு மாதந்தோறும் உற்பத்தி செய்கிறது.

மாநில அரசின் புதிய கொள்கை விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. மாநிலத்தில் தற்போது சோலார் பேனல்கள் அமைக்க நில தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்கனவே நீர்நிலைகளில் சோலார் பேனல்கள் நிறுவும் திட்டம் உலகளவில் நடைமுறைபடுத்தப்படுகிறது.

புதிய கொள்கையின்படி வறண்ட நிலம், கால்வாய், குளம் போன்றவற்றில் தூய்மை எரிசக்தி நிறுவனங்கள் சோலார் பேனல்கள் அமைத்து 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு அனுமதி வழங்கவுள்ளது. நீர்நிலைகளில் சோலார் பேனல் அமைப்பதால் விவசாயத்திற்கு நிலம் முழு அளவில் பயன்படுத்தப்படும். எனினும் நீரினால் பாதிக்காத வகையில் சோலார் பேனல்கள் அதிகளவில் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.