மகாபலிபுரம் நுழைவுக் கட்டணம் மும்மடங்கு உயர்வு

Must read

magapali
இந்தியா முழுவதும் உள்ள 116 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்திய தொல்லியல் ஆராய்ச்சி மையம் பராமரித்து வருகிறது. இதில் 36 உலக பராம்பரிய சின்னங்களும் அடங்கும். இதில் உலக பாரம்பரிய சின்னங்களாக பராமரிக்கப்படும் இடங்களுக்கு ஒருவித நுழைவுக் கட்டணமும், மற்ற இடங்களுக்கு ஒருவித நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள 403 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறை பராமரித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், மகாபலிபுரம் உலக பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு உள்நாட்டு பயணிகள் மட்டுமல்ல, ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் உலக பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கான கட்டணங்களை மும்மடங்காக உயர்த்தி மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணம் ரூ. 10லிருந்து ரூ. 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டணம் ரூ. 250லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல பாரம்பரிய சின்னங்கள் அல்லாத பகுதிகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணம் ரூ. 5லிருந்து ரூ. 15 ஆகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணம் ரூ.100லிருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

More articles

Latest article