11822464_1626899257565794_4460440438624979305_n

சென்னை: பேஸ்புக் எனப்படும் முகநூல் மூலம் பலரும் தங்கள் எழுத்துத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்,சென்னையைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்கிற உமையாள்.

இவர் தனது பக்கத்தில், “கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்” என்ற தொடர்கதையை எழுதிவருகிறார்.

பேஸ்புக் மூலம் பெண்களை வீழ்த்தும் ஒரு இளைஞனையும், அவனிடம் ஏமாந்த பெண்களைப்பற்றியுமான தொடர் இது.

இந்ததொடரில் வரும் சில கதாபாத்திரங்கள் தங்களைக் குறிப்பதாகக் கருதி சிலர் உமாமகேஸ்வரியை பேஸ்புக் மூலம் டார்ச்சர் செய்தார்கள். ஒரு கட்டத்தில் தொல்லை பொறுக்காமல், சென்னை போலீஸ் கமிஷனரிடம் உமாமகேஸ்வரி புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,

“என்னனுடய பேஸ்புக் தொடர் பற்றியும்,   என்னை மிகவும் மோசமாக விமர்சித்து தொடரை தடுக்க நினைக்கும் சிலரைப்பற்றியும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரை நேரடியாக சந்த்தித்து புகார் அளித்திருக்கிறேன்.

யார் எதிர்த்தாலும் அந்தத் தொடரை எழுதி முடிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

உமாமகேஸ்வரி என்கிற உமையாள் எழுதும், “கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்” தொடரின் முதல் அத்தியாயம் மட்டும் இங்கே…

“நம் நாயகன் ஒரு எழுத்தாளன். சமுக வலைதளங்களில் சாதனையாளன். அன்பே உயிர், மத்ததெல்லாம் …….. என்று சொல்லும் உத்தம வில்லன். அபலை பெண்களாய் தேடி அணைத்து ஆறுதல் சொல்லும் ஒரு ஆன் லைன் வியாபாரி. மனிதாபிமானத்தில் மகாபிரபு ! செத்துகொண்டிருக்கும் ஒருத்தியிடம் சாப்பிட்டாயா என்று கேட்கும் அளவிற்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இவன் மனிதாபிமனாத்தை !
எழுத்தே இவன் பலம். பெண்ணியம் பேசியே கண்ணியமாய் கட்டிகொள்வன். இவன் எழுத்தை எண்ணமாய் நினைத்து ஏமார்ந்தவர்கள் ஏராளம். அன்பை தேடி அலைந்த உயிர்கள் பொய்யான இவன் வார்த்தைகளை நம்பி புனிதனாய் இவனை நினைக்க, பின் உண்மை உணரும் போது புவியை வெறுத்த கதை ஏராளம். இவன் அன்பின் தாரளமயமாக்கபட்ட கொள்கையால் மன்னனின் மனைவியர் முதல் மாடல் மங்கையர் வரை மயங்கி மடியில் விழுவர் இந்த மன்மதனிடம். அடுத்தவர் மனைவி என்றால் இவனுக்கு அல்வா சாப்பிடுவது போல். ஏன் என்றால் அனுபவிக்கவும் எளிது, அவிழ்த்து விடவும் எளிது. அழிச்சாட்டியம் பண்ணினால் ஆம்படையனிடம் சொல்லிவிடுவேன் என்றது அடங்கிவிடுவார்களே !
கன்னி பெண் ஒருத்தியை பெற்றோரை விட்டு பிரித்து தனியாக வீடு எடுக்க செய்து இவன் தாயாகிரானாம். வீட்டின் உள்ளே ஆசைநாயகன் வெளியே அன்னை வேஷம். மகள் என்றால் ஒரு நல்ல மாப்பிள்ளை தேடி வாழ்கை அமைத்து கொடுக்க வேண்டியது தானே !மயக்கி மடியில் தாங்குவது ஏன்… அவளும் இவனை தவிர யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டாளம் அப்பறம் என்ன அன்னை வேஷமோ.
இப்படி நம் கதாநாயகனை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
நாளை நம் நாயகி மாட்டிய கதை. கட்டிக்கவான்னு கேட்டது, கையை எரித்துக்கொண்டது, செத்துடுவேன்னு சொல்லி தற்கொலைக்கு முயற்சி பண்ணினது, இப்படி இந்த அரைலூசு பண்ணிய அமர்க்களங்கள் எல்லாம் அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில்.”