1 ரஜினி
புத்தாண்டு தினமான இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பொதுவாக தனது பிறந்த நாளின் போது ரஜினி சென்னையில் இருக்க மாட்டார். தீபாவளி, பொங்கல் புத்தாண்டு போன்ற நாட்களிலும் பெரும்பாலும் வீ்ட்டில் இருக்க மாட்டார். அதை வெளிப்படையாகவு அறிவித்து விடுவார். ஏனென்றால், ரசிகர்கள் வந்து ஏமாந்து செல்லக்கூடாது என்பதற்காக.
ஆனாலும் புத்தாண்டு போன்ற தினங்களில் ரசிகர்கள் அவரது வீடு தேடிச் சென்று வாழ்த்துகளைக் கூறச் செல்வார்கள். ரஜினியும் அன்று வீட்டில் இருந்தால் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்.
அதே போல புத்தாண்டு தினமான இன்று ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற ஏராளமான ரசிகர்கள் போயஸ் கார்டன் இல்லத்தின் முன் திரண்டார்கள்.
ரசிகர்கள் வந்த தகவலை அறிந்த ரஜினி, அவர்களை சந்திக்க விருப்பப்பட்டார். உடனே மன்ற பொறுப்பாளர் சுதாகள், வீட்டு முன் கூடிய ரசிகர்களை ஒழுங்குபடுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் வீட்டிலிருந்து வெளியில் வந்தார் ரஜினி. அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக கூக்குரல் இட்டனர். வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ரஜினியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கை கூப்பியபடி சில நிமிடங்கள் நின்று விட்டு பின்னர் வீட்டுக்குள் சென்றுவிட்டார் ரஜினி. புத்தாண்டு தினமான இன்று ரஜினியை நேரில் பார்த்து வாழ்த்து பெற்றது உற்சாகமாக இருப்பதாக அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.