unnamed

 

முதல் படத்தில் காணப்படும் சிறுமி சமீபத்தில் மதுவிலக்கு கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்.  உண்மையாகச் சொன்னால், “கலந்துகொள்ள வைக்கப்பட்டவர்”.

ஆமாம்.. இது போன்ற அறியா வயதுள்ள சிறுவர்களுக்கு தாங்கள் கலந்துகொள்ளும் போராட்டம் பற்றியோ அதன் விளைவு பற்றியோ என்ன தெரியும்?

அது மட்டுமல்ல.. இது போன்ற போராட்டத்தின் போது காவல்துறையினருடன் தள்ளு முள்ளு ஏற்படலாம், அல்லது தடியடி நடக்கலாம்.

ஏன்.. ஆர்ப்பாட்டத்தில் துவங்கி, தள்ளுமுள்ளு நடந்து, அடுத்தடுத்து  கண்ணீர் புகை வீச்சு  துப்பாக்கிச்சூடு என்றெல்லாமும் பல இடங்களில் நடந்திருக்கின்றன.

அப்படியான சிறுமி ஒருத்தி கதறி அழுததை கடந்த மே மாதம் பார்த்தோம். 

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருந்த அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்ட அமைப்பை நிர்வாகம் தடை செய்ததை கண்டித்து  நடந்த ஆர்ப்பாட்டத்தில் தனது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வந்த சிறுமி இவர்.

குழந்தை 1

ஒரு கட்டத்தில் காவல்துறைக்கு்ம் போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு நடக்க… பதறி பயந்த அந்த சிறுமி கதறி அழுத காட்சிதான் இரண்டாவது படம். கடைசியில் அந்த சிறுமியை காவலர் ஒருவர் பத்திரமாக தூக்கிச் சென்றார்.

மதுவிலக்கு கோரும் ஆர்ப்பாட்டமோ, பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டடம் தடை செய்யப்பட்டதற்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டமோ… சரி தவறு என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

இது போன்ற போராட்டங்களுக்கு  அறியா குழந்தைகளை.. அது தங்கள் குழந்தைகள் ஆனாலும் அழைத்து வருவது பெற்றோர் செய்யும் தவறே.

தங்கள் கருத்துக்களை குழந்தையும் ஏற்க வேண்டும் என்றால் அதற்கான புத்தகங்களை படிக்கக் கொடுக்கலாம் அல்லது பிரச்சினை இல்லைத கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

போராட்டத்தில் தங்களது குழந்தையின் பங்கு இருக்க வேண்டும் என்று விரும்பினால், போஸ்டர்கள் எழுதுவது போன்ற பொறுப்புகளை தரலாம். அதைவிட்டு, போராட்ட களத்துக்கு அழைத்து வந்து குழந்தைகளை பயப்படுத்தவேண்டுமா.

 

“போராட்ட” பெற்றோர்கள் யோசிக்க வேண்டும்!