பாலா – சசிகுமார் லடாய்!

Must read

bala-sasi

 

பாலா படத்தில் நடிப்பது போலவே, அவரோடு பழகுவதும் டெரரான அனுபவத்தைக் கொடுத்துவிடும். அப்படி பழகி பலரும் சேதுவாக, அகோரியாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் நடிகரும் இயக்குநருமான சசிகுமார்.

பாலா இயக்கம் + தயாரிப்பில் சசிகுமார் நடிக்க ஆரம்பிக்கப்பட்டது “தாரை தப்பட்டை” திரைப்படம். வழக்கம்போல பாலா, இழுத்தடிக்க.. நாயகன் சசிகுமாருக்கு, “இந்த பட ஷூட்டிங்லேயே நம்ம ஆயுசு முடிஞ்சிரும் போலிருக்கே” என்று பயப்பட ஆரம்பித்துவிட்டார். ஆகவே, படத்தின் தயாரிப்பு  பொறுப்பை தானே ஏற்று, விறுவிறுவென படப்பிடிப்பை முடிக்கச் செய்தார்.

இடையிடேயே ஷூட்டிங்கில் இருந்து எஸ்கேப் ஆகி, அடுத்தபட பாடல் பதிவையும் இசையமைப்பாளர் இமானைவைத்து முடித்தார்.  இந்த விசயம் லேட்டாகத்தான் பாலாவுக்குத் தெரிந்தது.

தாரைதப்பட்டை படப்பிடிப்பின் இறுதி நாள் அன்று, “இனிமே புகழ் பெற்ற நடிகர்களை என் படத்தில் சேர்க்கவே மாட்டேன். எல்லாம் புதுமுகம்தான்” என்று ஓப்பன் மைக்லேயே அறிவித்தார்.

இப்போது படத்தயாரிப்பு செலவு குறித்து பாலாவுக்கும் சசிக்கும் முட்டிக்கொண்டதாம்.  ஆகவே ரிலீஸில் சிக்கல் என்கிறார்கள்.

தாரை தப்பட்டை சவுண்டை ரசிகர்கள் கேட்க முடியாது போல!

More articles

Latest article