பாப்பாக்களின் அம்மாக்கள் கவனிக்க…

Must read

images (36)
பாப்பாக்களின் அம்மாக்கள் கவனிக்க…ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள அம்மாக்களே. இன்ற முக்கியமான நாள். உங்கள் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டிய தினம்.
தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதுக்குள்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை ) காலை 7 முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் செயல்படும். இரண்டாவது தவணை முகாம் பிப்ரவரி 22-இல் நடைபெறுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் 43,051 மையங்களும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 1,652 நடமாடும் மையங்களும் நிறுவப்படும்.
இந்தப் பணிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
ஏற்கெனவே குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து அளித்திருந்தாலும் மீண்டும் அளிக்கலாம்.
உடனடியாக குழந்தையை தயார்படுத்துக்கள்.. கணவரை, சொட்டு மருந்து முகாமுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடுங்கள்!

More articles

Latest article